நிர்பயா வழக்கில் அதிரடி திருப்பம் தூக்கில் போடுபவர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

Photo of author

By Parthipan K

நிர்பயா வழக்கில் அதிரடி திருப்பம் தூக்கில் போடுபவர் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவு

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் குற்றவாளிகளின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குற்றவாளிகளுக்கு அதிகபட்சமான கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் வரும் 20 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்காக தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்திரப்பிரதேச மாநிலம் மீரட்டை சார்ந்த பவன் ஜல்லாட் என்ற ஊழியர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் டெல்லி திகார் சிறை நிர்வாகம் சார்பாக உத்திரப்பிரதேச சிறைத்துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
பவன் ஜல்லாட் அவர்கள் செவ்வாய் கிழமையே அதாவது தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு மூன்று நாட்கள் முன்னதாகவே திகார் சிறைச்சாலைக்கு வந்து சேரும்படி அறிவுருத்தப்பட்டுள்ளது.

மூன்று கைதிகள் தங்களது குடும்பத்துடன் இறுதி சந்திப்பை நிகழ்த்திவிட்ட நிலையில் வினய் என்ற கைதியின் குடும்பத்தினர் மட்டும் இதுவரை அவனை சந்திக்கவில்லை என்று சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.