சமந்தா வழக்கு…… நீதிபதியின் அதிரடி உத்தரவு!

Photo of author

By Parthipan K

கோலிவுட்டில் இருந்து டோலிவுட் சென்று தற்போது தென்னிந்தியா சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் சமந்தா.

மார்க்கெட் இழந்து விட கூடாது என பல முன்னணி நடிகைகைகளும் திருமணத்தை தவிர்த்து வரும் நிலையில், திருமணம் ஆன பின்பும் கூட கடந்த நான்கு வருடங்களாக உச்சக்கட்ட மார்க்கட் நிலவரத்தில் சினிமா உலகை ஆட்சி செய்து வருகிறார் சமந்தா.

தன்னுடைய வசீகரத்தினாலும், திறமையான நடிப்பினாலும் ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார் என்றே சொல்லலாம்.

சமந்தா தன்னுடைய நீண்ட வருட காதலனான நாகசைதன்யாவை 2017ஆம் ஆண்டு திருமணம் செய்தார். நாகசைதன்யா தெலுங்கு சூப்பர்ஸ்டார் நாகர்ஜூனாவின் மூத்த மகன். தெலுங்கு சினிமாவின் மிக முக்கியமான குடும்பம் அக்கினேனி குடும்பம். இங்கு திருமணம் செய்ததால் சமந்தா இன்னும் பேர் பெற்றார் என்றே சொல்லலாம்.

சமந்தாவுக்கு என்று தனி ரசிகர்கள் மட்டுமின்றி, ‘ChaySam ‘ என்று இந்த தம்பதிகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் உருவானது. சூர்யா-ஜோதிகா போல் முன்மாதிரியான திரை உலக தம்பதிகளாக இவர்கள் இருப்பார்கள் என நினைத்திருந்த நிலையில் இந்த மாத முதலில் இருவரும் தங்களது விவாகரத்து செய்தியை அறிவித்தனர்.

விவாகரத்திற்கு பிறகு சமந்தாவை சுற்றி பல வதந்திகள் வலம் வந்தன. இதனால் மன உளைச்சல் அடைந்த சமந்தா இது போன்ற வதந்திகளை பரப்பும் மீடியாக்கள் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இனி எந்த ஊடகமும் சமந்தா சொந்த வாழ்க்கை பற்றி எந்த ஒரு செய்தியையும் வெளியிடக் கூடாது எனவும், இதற்க்கு முன் பதிவிட்ட கருத்துக்களை நீக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

மேலும் சமந்தாவும் இனி தனது சொந்த வாழ்வை பற்றி எந்த ஒரு கருத்தையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடக்கூடாது என உத்தரவிட்டார்.