பொதுவாகவே வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லப்பிராணிகள், அந்த வீட்டின் உரிமையாளரின் சைகைகளை புரிந்தும், சொல்வதை கேட்டும் நடந்துகொள்ளும் என்பது அனைவரும் அறிந்ததே.
அவ்வாறு செல்லப்பிராணிகள் சொல்வதை கேட்டு நடக்கும்போதும் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும், அல்லது சொல்வது புரியாமல் அவை செய்கின்ற செயலால் ஏற்படக்கூடிய நிகழ்வுகளும் காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தும்.
இது போன்ற செல்லப்பிராணிகளை கொண்டு, பலர் அவற்றின் சேட்டைகளை வீடியோவாக எடுத்தும், புகைப்படமாக எடுத்தும் வலைதளங்களில் வெளியிடுவது வழக்கமாக உள்ளது. இது நம் நாட்டில் மட்டுமல்ல பிற நாடுகளிலும் இவ்வாறு நடப்பது இயல்பான ஒன்றாகும்.
தற்போது அயர்லாந்தில் இருந்து ஒரு நாய்க்குட்டி தன் வீட்டு உரிமையாளரின் சொற்களைக் கேட்டு நடந்துள்ளது. அந்த நாய்க்குட்டியின் பெயர் ‘ஹார்ல்சோ’. இது ஒரு ‘டேஷண்ட்’ என்ற இனத்தை சேர்ந்த நாய்க்குட்டி.
இந்த நாய் குட்டியின் தலையில் உரிமையாளர் ஒவ்வொரு கேக்களையும் அடுக்கடுக்காக அடுக்கினார். இந்த அனைத்து கேக்குகளையும் அந்த நாய்க்குட்டி தன் தலையில் அடுக்கும் போது அமைதியாகவும் மற்றும் மிகுந்த பொறுமையுடனும் அழகாக அமர்ந்திருந்தது காண்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.