இன்று வெளுத்து வாங்கப்போகும் மழை! சென்னை ஆய்வு மிக முக்கிய தகவல்!

0
178

தமிழ்நாட்டில் இன்றைய தினம் உதகை, கோவை, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற தென்காசி, திண்டுக்கல், தேனி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதே போல மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலைதான் நிலவி வரும் என்று சொல்லப்படுகிறது.

நாளைய தினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சொல்லப்படுகிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்றும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை ஆக 26 டிகிரி செல்சியஸ் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleநகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!
Next articleநோய்த்தொற்று பரவல்! புதிய தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here