நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்! அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

0
82

தமிழ்நாட்டில் ஊரக மற்றும் நகர்ப்புற என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் இருக்கிறது. பல மாவட்டங்களைப் பிரித்து புதிய வட்டங்களை உருவாக்கப்பட்டதால் 10 புதிய மாவட்டங்கள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருக்கிறது. அதேபோல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் இதுவரையில் நடத்தப்படவில்லை. மீதம் இருக்கின்ற மாவட்டங்களுக்கு மட்டுமே 2019ஆம் ஆண்டு இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தது.

இவருக்கு முன்னதாக கடந்த 2016 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டு அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதன்காரணமாக, அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது இந்த நிலையில் அந்த தேர்தல் ரத்து செய்யப்பட்ட பின்னர் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வாகம் செய்வதற்கு புதிய அதிகாரிகள் தமிழக அரசு நியமனம் செய்தது.இந்த நிலையில் மீண்டும் தேர்தல் நடத்தப்படுவதன் காரணமாக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிர்வாகம் செய்வதற்காக நியமனம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பதவிக்காலம் அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதோடு தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த சூழ்நிலையில், தூத்துக்குடியில் அமைச்சர் கே என் நேரு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, அக்டோபர் மாதத்திற்கு பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் .தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரை மாநகராட்சியாக அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் முடிவு செய்வார் என்று தெரிவித்திருக்கிறார்.