வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Photo of author

By Sakthi

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்!

Sakthi

தமிழ்நாட்டின் இன்றைய தினம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் மற்றும் வடமாவட்டங்கள் அதோடு புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

எதிர்வரும் 29ஆம் தேதி அதாவது நாளை முதல் 31ஆம் தேதி வரை கோவை, உதகை, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் அதனை சார்ந்து இருக்கின்ற உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். நகரத்தின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும், குறைந்தபட்ச வெப்பநிலை ஆக 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் சுட்டிக்காட்டியிருக்கிறது.