அடுத்த நான்கு நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கன மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Photo of author

By Sakthi

தமிழ்நாட்டில் இன்றைய தினம் உதகை ,கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்க்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற மாவட்டங்களை பொருத்த வரையில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நாளைய தினம் கோவை , உதகை மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்கிறது.

வரும் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி மற்றும் இரண்டாம் தேதி இதில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திண்டுக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் கடலோர மாவட்டங்கள் அதோடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

சென்னையைப் பொருத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகவும், இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது