காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவிய வேட்பாளர்! அதிர்ச்சியில் தொண்டர்கள்!
இந்த சட்டமன்ற தேர்தலானது ஐந்து மாநிலங்களில் நடக்கயிருக்கிறது.அதில் மேற்கு வங்கத்தில் முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்றது. இங்கு மொத்தம் 294 தொகுதிகள் உள்ளன.இதில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதிலும் 5 மாவட்டங்கலிலுள்ள 30 தொகுதிகளில் வாக்கு பதிவு தொடங்கியது. மேலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற 30 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிட தக்கது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சின் வேட்பாளர் மற்றும் தற்போதைய முதலமைச்சராக மம்தா பானர்ஜி உள்ளார்.
இத்தேர்தலின் போது பல வித கொளறுபடிகள் நடந்து வருகின்றனர்.அந்தவகையில் அஸ்ஸாம் மாநிலம் தாலம்பூர் தொகுதியில் காங்கிரசுடன் போடோலாந் மக்கள் முன்னணி கட்சியின் வேட்பாளர் பசுமாதிரி இணைத்திருந்தார்.ஆனால் அவர் திடிரென்று பாஜக விற்கு தாவினார்.
அதற்கு முன் இவர் இரு தினங்களாக தலைமறைவாக இருந்துள்ளார்.அதன்பின் அவரிடம் தனியார் ஊடகங்கள் பல கேள்விகளை எழுப்பியது.அப்போது அவர் கூறியது,காங்கிரஸில் நான் இருந்த போது கட்சியின் செலவிற்காக பணம் கேட்டேன்,ஆனால் காங்கிரஸ் தர மறுத்துவிட்டது.அதனால் நான் பாஜக வுடன் கை கோர்த்தேன் என்றார்.
ஆனால் இவர் கூறிய பதில் திருப்பதி அளிக்காத காரணத்தினால்,காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் விசாரிக்கும் படி கூறியுள்ளது.காங்கிரஸ் கூறியது,இவரை தன்னுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பாஜக மிரட்டியுள்ளது.அதனால் தான் இவர் 2 நாட்களாக தலைமறைவாக இருந்தார்.அவர்களின் மிரட்டளுக்கு பயந்து அக்கட்சியில் கூட்டணி வைத்துக்கொண்டார்.அதனால் தேர்தல் ஆணையம் அவரிடம் விசாரிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.மேலும் தலாம்பூர் தொகுதியின் தேர்தலை ரத்து செய்யவும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.