சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றனர்.அந்த விதத்தில் பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் முறை இருந்து வருகிறது.
பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜூன் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.
அதன்படி சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 95 ரூபாய் 99 காசுக்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 90 ரூபாய் 12 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிலவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்ததாக தெரிகிறது.