12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து வெளியாக இருக்கும் முக்கிய அறிவிப்பு!

0
155

நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை மிகவும் உச்சகட்ட தாக்கத்தில் இருந்து வருகிறது. தற்போது அதன் வேகம் கொஞ்சம் குறைந்து வந்தாலும் கூட மாநிலங்களில் தற்சமயம் இந்த தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில், நேற்று மாலை பிரதமர் மோடியுடன் மத்திய கல்வித்துறை அதிகாரிகள் சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசனை செய்திருக்கிறார்கள்.

இந்த ஆலோசனையின் முடிவில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு சார்பாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.நேற்றுக் காலை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுடன் மத்திய கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில கல்வி அமைச்சர் போன்றோர் ஆலோசனை செய்தார்கள்.

இதற்கிடையே மத்திய அரசு பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகளை ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மாநில அளவிலான கல்வியின் அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடைபெறுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து இன்று கல்வித்துறை அதிகாரிகளுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த இருக்கிறார். அதன்பிறகு முதலமைச்சர் ஸ்டாலினுடன் அவர் ஆலோசனை செய்து முடிவு அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருக்கிறார்.