இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரானா பாதிப்பினால் ஊரடங்கு ஜூன் 30 வரை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பொதுமுடக்கத்திற்கு அன்லாக் 1.0 எனப்பெயரிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்த 3-ஆம் கட்ட பொதுமுடக்கம் நிறைவடைந்த நிலையில் 4-ஆம் கட்ட பொதுமுடக்கமாக இந்த ஜூன் மாத பொதுமுடக்க நீட்டிப்பு கருதப்படுகிறது. மேலும் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் தளர்வு அளிக்கப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்பு போடப்பட்ட ஊரடங்கினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அன்றாட தேவைகளுக்கு போராடினர். போக்குவரத்து வசதி இல்லாமல் நடந்தே தங்கள் மாநிலத்திற்கு செல்லும் அவலநிலையும் ஏற்பட்டது.
இந்நிலையில் அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கமானது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சில தளர்வுகளை அரசு முன்னிருத்தினாலும் அவைகள் ஒன்றும் இயல்பு வாழ்க்கையை மீட்டு தராது எனவும் கூறி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கொரானாவல் உயிரப்பவர்களின் எண்ணிக்கையை விட பசி பட்டினியாலும், தனிமையின் மன உலைச்சாலும் மக்கள் பலியாகும் நிலை ஏற்படப்போகிறதென மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.