தேர்தல் களத்தில் களமிறங்கும் ஜூனியர் எம்.ஜி.ஆர் !

Photo of author

By Rupa

தேர்தல் களத்தில் களமிறங்கும் ஜூனியர் எம்.ஜி.ஆர் !

சட்ட மன்றத்தேர்தல் ஏப்ரல் மாதம் நடக்க இருக்கிறது.அந்தவகையில் அதிமுக மற்றும் திமுகவினர் வேட்புமனு தாக்கலை அளித்து வருகின்றனர்.இதனையடுத்து அதிமுக நிர்வாகிகள் ராயப்பேட்டிலுள்ள தலைமை அலுவலகத்தில் தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.இந்தவகையில்  ஜூனியர் எம்.ஜி.ஆர்.ரும் வேட்புமனு தாக்கலை அளித்தார்.

ஜூனியர் எம்.ஜி.ஆர் வேட்புமனு தாக்கல் அளிப்பதற்கு முன்பாக சென்னை ராமாபுரம் எம்.ஜி.ஆர் இல்லத்திலிருந்து ஜூனியர் எம்.ஜி.ஆர் திருவுருவ சிலையான எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவிதத்தார்.அதன்பின் ராயபேட்டையிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டார்.இதனையடுத்து அவருக்கு ஆரவாரங்கள் கூடிய வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்பின் 50 க்கும் மேற்பட்ட கார்களில் தொண்டர்களும் புறப்பட்டு சென்றனர்.பின்பு ஜூனியர் எம்ஜிஆர் க்கு ஆரத்தி எடுக்கப்பட்டது.அதன்பின் ஜூனியர் எம்ஜிஆர் செய்தியாளர்களிடம் பேசினார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறியது,ஆலந்தூர்,பல்லாவரம்,ஆண்டிபட்டி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கலை அளித்துள்ளேன்.இரண்டு சட்டமன்ற தொகுதிகளில் நான் வெற்றிபெற அதிக வாய்புக்கள் உள்ளது என அவர் கூறினார்.வாய்ப்பு மறுக்கப்பட்டால் ஒரு நாளும் நான் தனித்து நிற்க மாட்டேன்.அதிமுக எனக்கு வாய்ப்பு அளிக்கும் எனவும நம்பிக்கையுடன் கூறினார்.

அனைத்து கட்சிகளும் என்னை கூட்டு சேர்பதற்காக பல அழைப்புகளை விடுக்கின்றனர். ஆனால் நான் ஒரு நாளும் அதிமுகவை தவிர்த்து வேறு கட்சிக்கு செல்ல மாட்டேன் என உறுதியாக பேசினார்.இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கு தான் நான் இருப்பேன் என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.கடைசிவரை அதிமுக தொண்டனாகவே  நிலை நிற்பேன் எனவும் கூறினார்.