குட்டி ஸ்டோரி பாடல்: தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்து வைக்கும் அனிருத் ! பாடப்போகும் சூப்பர் ஸ்டார் !

0
153

குட்டி ஸ்டோரி பாடல்: தெலுங்கு ரசிகர்களுக்கும் விருந்து வைக்கும் அனிருத் ! பாடப்போகும் சூப்பர் ஸ்டார் !

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலின் தெலுங்குப் பதிப்பை ஜூனியர் என் டி ஆர் பாட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, மாளவிகா மேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை மாநகரம் மற்றும் கைதி படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். படம் கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.  ஏற்கனவே இந்த படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன.

இடையில் நடந்த ரெய்டு பிரச்சனைகளால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று காதலர் தினத்தை முன்னிட்டு படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குட்டி கத என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள இந்த பாடல் மாலை 5 மணிக்கு வெளியானது.

இந்த பாடல் கொலவெறி மற்றும் ராஜகாளியம்மன் படத்தில் இடம்பெற்ற சந்தன மாளிகையில் தூளி கட்டிப் போட்டேன் என்ற பாடலின் காப்பி என சொல்லப்பட்டது. ஆனாலும் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை இந்த பாடல் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இப்போதே பலபேரின் காலர் ட்யூனாகவும் மாறிவிட்டது. இந்நிலையில் மாஸ்டர் தெலுங்கு வெர்ஷனில் இந்த பாடலை வெகுவிரைவில் பதிவு செய்திருக்கும் அனிருத் அதற்காக டிக் செய்திருக்கும் நபர் யார் தெரியுமா?

தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் ஜூனியர் என் டி ஆரைத் தேர்வு செய்துள்ளார் அனிருத். இது சம்மந்தமாக என் டி ஆரிடம் பேச அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். இதன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடம் அதிகளவில் இந்த பாடல் சென்று சேரும் என சொல்லப்படுகிறது.

Previous articleஇந்தியன் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை நிறுத்தியது! திடீர் முடிவால் மக்களிடையே பரபரப்பு..!! உண்மை நிலவரம் என்ன..?
Next articleஹாரி – மேகனுக்கு ராயல் பெயரை பயன்படுத்த தடை விதித்த இங்கிலாந்து ராணி!!