குரு பெயர்ச்சி 2025: இந்த ராசியில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்!!

Photo of author

By Divya

குரு பெயர்ச்சி 2025: இந்த ராசியில் பிறந்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்!!

Divya

நடப்பு ஆண்டில் குருபெயர்ச்சியானது திருக்கணிதப்படி வருகின்ற மே 14 அன்று நிகழ இருக்கின்றது.இந்த குருபெயர்ச்சியில் குரு ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்ல இருக்கிறார்.மேஷ ராசியில் குரு மூன்றாம் இடத்திற்கு செல்கிறார்.இந்த குரு பெயர்ச்சியால் மேஷ ராசியினருக்கு அதிக மகிழ்ச்சி ஏற்பட இருக்கிறது.

ரிஷப ராசியில் இருந்து குருபகவான் இரண்டாம் இடமான மைத்துனர் ராசிக்கு செல்ல உள்ளார்.ரிஷப ராசிக்கு இந்த குரு பெயர்ச்சியால் சில நல்லது நடக்க வாய்ப்பிருக்கிறது.அதே சமயம் ரிஷப ராசியினர் தங்கள் வார்த்தையில் கவனத்தை செலுத்த வேண்டும்.அதேபோல் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும்.

குரு பகவானின் ஜென்ம ராசி மிதுனம்.வருகின்ற மே 14 அன்று மிதுன ராசிக்கு குரு பகவான் வருகிறார்.இந்த ராசியினர் அனைத்திலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.கடகத்தில் குரு பகவான் 11 ஆம் இடத்தில் இருந்து 12 ஆம் இடத்திற்கு நகர்கிறார்.இந்த ராசியினர் முழு கவனத்துடன் செயல்பட வேண்டியது முக்கியம்.

சிம்ம ராசியில் 10 ஆம் இடத்தில் இருந்து குருபகவான் குரு பெயர்ச்சி காரணமாக 11 ஆம் இடத்திற்கு நகர்கிறார்.குருப்பெயர்ச்சி இந்த ராசியினர் நிதானமாக செயல்பட வேண்டியது முக்கியம்.கன்னி ராசிக்கு 9 ஆம் இடத்தில் இருந்து 10 ஆம் இடத்திற்கு குரு பகவான் வருகிறார்.இந்த ராசியினருக்கு நிதானம் இருந்தால் வாழ்வில் உயர்வு கிடைக்கும்.

துலாம் ராசிக்கு 8 ஆம் இடத்தில் இருந்து 9 ஆம் இடத்திற்கு குருபகவான் வருகிறார்.இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு வாழ்வில் ஏற்றங்கள் உண்டாகும்.விருச்சிக ராசியில் 7 ஆம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்திற்கு வருகிறார்.குருப் பெயர்ச்சி காரணமாக இந்த ராசியினருக்கு வீண் பயம் குறையும்.உயர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு குருவானது 6 ஆம் இடத்தில் இருந்து 7 ஆம் இடத்திற்கு செல்கிறார்.இந்த ராசிக்காரர்களுக்கு நிதானம் தேவை.மகர ராசிக்கார்களுக்கு 5 ஆம் இடத்தில் இருந்து குருபகவான் 6 ஆம் இடத்திற்கு செல்கிறார்.இந்த ராசிக் காரர்களுக்கு உடல் நலத்தில் அக்கறை தேவைப்படுகிறது.

கும்ப ராசியில் 4 ஆம் இடத்தில் இருந்த குருபகவன் குருப்பெயர்ச்சி காரணமாக ஐந்தாம் இடத்திற்கு செல்கிறார்.இந்த ராசிக்காரர்கள் வீண் ரோஷத்தை தவிர்க்க வேண்டும்.குருவானது மீன ராசியில் 3 ஆம் இடத்தில் இருந்து 4 ஆம் இடத்திற்கு செல்கிறார்.இவர்களுக்கு வார்த்தையிலும்,செயலினும் நிதானம் தேவைப்படுகிறது.