வெறும் 2 பொருள் போதும்.. அக்குளில் உள்ள முடிகள் அனைத்தும் நிரந்தமாக நீங்கிவிடும்!!

Photo of author

By Divya

பெண்கள் தங்கள் அக்குளில் முடி இருப்பதை விரும்புவதில்லை.இதை ரிமூவ் செய்ய இரசாயனங்கள் நிறைந்த க்ரீமைகளை பயன்படுகின்றனர்.சிலர் ஷேவிங் மெஷின் மூலம் அக்குள் முடியை நீக்க முயற்சிக்கின்றனர்.ஆனால் இந்த முயற்சிகள் நிரந்தர பலனை கொடுக்காது.

ஆனால் கீழே சொல்லப்பட்டுள்ள ஹோம் ரெமிடியை முயற்சித்தால் நிச்சயம் அக்குள் முடி நிரந்தரமாக நீங்கிவிடும்.

தீர்வு 01:

1)உருளைக்கிழங்கு – ஒன்று
2)உளுந்து பருப்பு – ஒரு தேக்கரண்டி

முதலில் இரண்டு தேக்கரண்டி உளுந்து பருப்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரத்திற்கு ஊற விடுங்கள்.

அதன் பிறகு ஒரு உருளைக்கிழங்கை தோல் சீவிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.பிறகு மிக்ஸி ஜாரை சுத்தம் செய்து ஊறவைத்த உளுந்து பருப்பை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

அதற்கு அடுத்து நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்தெடுத்துக் கொள்ளுங்கள்.இப்பொழுது அரைத்து வைத்துள்ள உளுந்து மற்றும் உருளைக்கிழங்கு பேஸ்டை ஒன்றாக மிக்ஸ் செய்து அக்குள் பகுதியில் தடவி ஒரு மணி நேரம் காய விடுங்கள்.

பிறகு வெது வெதுப்பான நீரில்அக்குள் பகுதியை தேய்த்து கழுவவும்.இப்படி வாரத்திற்கு இருமுறை செய்து வந்தால் அக்குள் பகுதியில் உள்ள முடி நீங்கும்.

தீர்வு 02:

1)எலுமிச்சை சாறு – இரண்டு தேக்கரண்டி
2)சர்க்கரை – இரண்டு தேக்கரண்டி

முதலில் பழுத்த எலுமிச்சம் பழம் ஒன்றை எடுத்து இரண்டாக நறுக்கி அதன் சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளுங்கள்.

பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.இதை அக்குள் பகுதியில் தடவி நன்கு உலர விடுங்கள்.பிறகு ஒரு காட்டன் துணியில் தண்ணீரை நனைத்து அக்குளை துடைக்கவும்.இப்படி செய்தால் அக்குளில் உள்ள முடிகள் அனைத்தும் நீங்கிவிடும்.