ஜஸ்ட் 2 மினிட்ஸ் போதும்.. உங்கள் ஆதார் கார்டில் தவறாக உள்ள பிறந்த தேதியை சரி செய்துவிடலாம்!!
இந்திய குடிமகன் என்ற அடையாளத்தை காட்டும் ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது.இந்த ஆதார் கார்டை இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) வழங்கி வருகிறது.
அரசு திட்டங்களுக்கு பிற தேவைகளுக்கு ஆதார் முக்கிய ஆவணமாக செயல்படுகிறது.வங்கி கணக்கு முதல் பணப் பரிவர்த்தனை வரை அனைத்து இடங்களிலும் ஆதார் இருந்தால் தான் வேலையே நடக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது.இவ்வாறு முக்கிய ஆவணமாக திகழும் ஆதார் காரடில் இருக்கின்ற உங்கள் புகைப்படத்தை 15 வயதிற்கு பின்னர் கட்டாயம் பதுப்பித்திருக்க வேண்டும்.
அதேபோல் உங்கள் ஆதாரில் பெயர்,பிறந்த தேதியில் பிழை இருந்தால் அதை உடனடியாக திருத்திக் கொள்வது நல்லது.இல்லையென்றால் பின்னாளில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.ஒருவேளை உங்கள் ஆதார் கார்டில் பிறந்த தேதியில் பிழை இருந்தால் அதை எவ்வாறு சரி செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
ஆதார் பிறந்த தேதியில் பிழை இருந்தால் திருத்த தேவைப்படும் ஆவணங்கள்:
1)பான் கார்டு
2)கல்வி சான்றிதழ்(மாற்றச் சான்றிதழ்,மதிப்பெண் சான்றிதழ்)
அருகில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று மேலே குறிப்பிட்டுள்ள ஆவணங்களை சமர்ப்பித்து தவறான பிறந்த தேதியை மாற்றி விடலாம்.இந்த சேவைக்கு ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இவ்வாறு
இவ்வாறு திருத்தபட்ட ஆதார் கார்டு புதுப்பிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் தபால் வழியாக தங்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.ஆதார் கார்டில் பிறந்த தேதி,புகைப்படம்,மொபைல் நம்பர்,பெயர் போன்றவற்றை மாற்ற வேண்டுமென்றால் அதற்கு ஆதார் பதிவு செய்யப்படும் இடத்திற்கு தான் செல்ல வேண்டும்.ஆதார் கார்டில் முகவரியை புதுப்பிக்க வேண்டுமென்றால் ஆன்லைன் வழியாக நீங்களே எளிதில் செய்து விட முடியும்.