இந்த ஸ்கீமில் மட்டும் அப்ளை பண்ணுங்க உங்களுக்கு 1 லட்சத்து 20000 ஆயிரம் கிடைக்கும்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Divya

இந்த ஸ்கீமில் மட்டும் அப்ளை பண்ணுங்க உங்களுக்கு 1 லட்சத்து 20000 ஆயிரம் கிடைக்கும்!! மிஸ் பண்ணிடாதீங்க!!

Divya

Just apply in this scheme and you will get 1 lakh 20000 thousand!! Don't miss it!!

தபால் அலுவலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால் அதிக வட்டி கிடைப்பதோடு நமது பணத்திற்கு பாதுகாப்பு கிடைக்கிறது.இதனால் போஸ்ட் ஆபிஸ் சிறு சேமிப்பு திட்டங்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது.5 முதல் 21 ஆண்டுகள் வரையிலான சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கின்றது.

தொடர் வைப்பு நிதி,வருங்கால வைப்பு நிதி,மாதாந்திர வருமான திட்டம்,பொது வருங்கால வைப்பு நிதி,செல்வமகள் சேமிப்பு திட்டம்,பொன் மகன் சேமிப்பு திட்டம்,கிசான் விகாஸ் பத்ரா,தேசிய சேமிப்பு பத்திரம்,மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட சிறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றது.

இதில் தொடர் வைப்பு நிதி(RD) ஐந்தாண்டு கால சேமிப்பு திட்டமாகும்.இத்திட்டத்திற்கு 6.5% முதல் 6.7% வரை வட்டி வழங்கப்படுகிறது.ரூ.100 செலுத்தி இத்திட்டத்தில் கணக்கு தொடங்கலாம்.தபால் அலுவலகங்கள் மட்டுமல்ல சில வங்கிகளிலும் இத்திட்டம் செயல்பாட்டில் இருக்கின்றது.ஆனால் போஸ்ட் ஆபிஸ் RD-ஐ காட்டிலும் வங்கிகளில் RD-க்கான வட்டி குறைவாக இருக்கும்.

18 வயதிற்கு மேற்பட்ட இந்திய குடிமகன்கள் யார் வேண்டுமானாலும் இந்த கணக்கு தொடங்கலாம்.போஸ்ட் ஆபிஸை பொறுத்தவரை ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டி விகிதம் திருத்தப்படும்.ஆனால் நீங்கள் கணக்கு தொடங்கிய போது நிர்ணயிக்கப்பட்ட வட்டி தான் முதலீடு காலம் முடியும் வரை தொடரும்.

தொடர் வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 50% வரை கடன் பெறும் வசதி இருக்கிறது.தொடர் வைப்பு நிதி திட்டத்தில் கணக்கு தொடங்க ஆதார் அட்டை,பான் அட்டை,முகவரி சான்று,பாஸ்போர்ட் சைஸ் போட்டோ தேவைப்படும்.

நீங்கள் இந்த திட்டத்தில் மாதந்தோறும் ரூ.2000 முதலீடு செய்து வந்தால் ஐந்தாண்டுகள் முடிவில் அசல் ரூ.1,20,000 மற்றும் வட்டி ரூ.22,732 கிடைக்கும்.அதுவே நீங்கள் மாதந்தோறும் ரூ.5,000 முதலீடு செய்து வந்தீர்கள் என்றால் ஐந்து ஆண்டுகள் முடிவில் அசல் ரூ.3,00,000 மற்றும் வட்டி ரூ.56,830 கிடைக்கும்.