இன்று இளைஞர்கள் பலர் வழுக்கை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.மன அழுத்தம்,தூக்கமின்மை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற காரணங்களால் தலைமுடி அதிகளவு உதிர்கிறது.
இவ்வாறு முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் புதிய முடி வளர இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையை பின்பற்றுங்கள்.
தேவையான பொருட்கள்:
1)செம்பருத்தி பூ
2)குப்பைமேனி
3)வேப்பிலை
4)கீழாநெல்லி
5)கற்றாழை
6)செம்பருத்தி இலை
7)மருதாணி
செய்முறை விளக்கம்:
முதலில் இரண்டு செம்பருத்தி பூ,ஐந்து செம்பருத்தி இலையை பறித்துக் கொள்ளுங்கள்.அதற்கு அடுத்து குப்பைமேனி,வேப்பிலை,கீழாநெல்லி,மருதாணி உள்ளிட்ட தழைகளை சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
உதாரணத்திற்கு கால் கைப்பிடி அளவு குப்பைமேனி எடுத்துக் கொண்டால் இதரவற்றையும் அதே அளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.
எடுத்து வைத்துள்ள பொருட்களை எல்லாம் தண்ணீர் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் அரைக்கவும்.
பிறகு தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து மைய்ய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.கையில் தொட்டால் நைஸாக இருக்க வேண்டும்.இந்த பதத்திற்கு அரைத்ததும் விழுதை ஒரு கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரம் ஊற விடுங்கள்.விழுதில் உள்ள சாறு முடிகளின் வேர்காள் பகுதியில் இறங்க வேண்டும்.பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி தலையை நன்கு அலசி சுத்தப்படுத்தவும்.இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் உதிர்ந்த இடத்தில் புதிய முடி முளைக்கும்.