பீட்ரூட் மட்டும் இருந்தால் போதும்! முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

Photo of author

By Parthipan K

பீட்ரூட் மட்டும் இருந்தால் போதும்! முகத்தில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு!

ஒவ்வொருவருக்கும் அவர்களின் முகம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என எண்ணுவது இயல்பு அதற்கு இயற்கை முறையில் என்ன செய்யலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். முதலில் பீட்ருட் ஒன்று, கேரட் ஒன்று, தக்காளி ஒன்று எடுத்து கொள்ள வேண்டும்.

அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை மற்றும் சிறிதளவு இஞ்சி சேர்த்து அதனை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். தினமும் ஒரு கப் ஜூஸ் குடித்து வந்தால் இளநரை மறையும்.மேலும் பீட்ருட் சாறினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து தண்ணீரால் கழுவினால் முகம் பொலிவு பெறும்.

அதனையடுத்து தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால், சருமம் சம்பந்தப்பட்ட பிரச்னை அனைத்தையும் தவிர்க்கலாம்.மேலும் முகப்பரு வருவதை தடுக்கலாம். பீட்ரூட் ரத்தத்தை தூய்மையாக்கி சருமத்தைப் பளபளப்பாக்கும்.

பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதில் சிறிது பார்லி பவுடர் மற்றும் லெமன் ஜுஸ் சிறிது சேர்த்து கலந்த கொள்ள வேண்டும்.அந்த பேஸ்ட்டை முகத்தில் பூசி பத்து நிமிடம் கழித்து கழுவினால் முகம் பிரகாசமாக மாறும்.

பீட்ரூட்டை தோல் சீவி, துருவி, விழுதாக அரைத்து கைகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து நன்கு காய்ந்த பின்னர் கைகளை கழுவவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் 3 முறை செய்து வந்தால் கைகள் மென்மையாக உதவும்.