சற்றுமுன்: அண்ணாமலை பதவி விலகல்.. மோடியுடன் அவசர மீட்டிங்!! வெளிவந்த முக்கிய தகவல்!!

0
270
Just before: Annamalai resigns.. Urgent meeting with Modi!! Important information released!!
Just before: Annamalai resigns.. Urgent meeting with Modi!! Important information released!!

சற்றுமுன்: அண்ணாமலை பதவி விலகல்.. மோடியுடன் அவசர மீட்டிங்!! வெளிவந்த முக்கிய தகவல்!!

தற்பொழுது நடந்த முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அதிமுக என்னதான் பாஜகவுடன் கூட்டணி வைத்தாலும் பின்னடைவை சந்தித்த பிறகு பலரும் விமர்சனம் செய்யத் தொடங்கியதோடு பலரும் கூட்டணி வைத்தது தான் இந்த தேர்தலில் தோல்விக்கான காரணம் என்றும் கூறி வந்தனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பாஜக நிர்வாகிகள் பலர் அடுத்தடுத்தாக அதிமுகவில் இணைய தொடங்கினர். அதிலும் முதலாவதாக பாஜகவின் ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் இணைய தொடங்கியதும் இவர் வழியே பலரும்இனைய தொடங்கி விட்டனர்.

ஐ டி விங் தலைவர் அதிமுகவுடன் இணைந்தது அண்ணாமலைக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்த நிலையில் அடுத்தடுத்த நிர்வாகிகளும் பின் தொடர்ந்து சேர்ந்தது அந்த துறைக்கு முக்கிய நிர்வாகிகள் இல்லாமல் ஆனது. மேற்கொண்டு ஐடி விங் தலைவர் மற்றும் செயலாளர் என அண்ணாமலை யாரை அமர்த்த போகிறார் என்ற கேள்வியும் எழத்தொடங்கியது. இதனிடையே பாஜக நிர்வாகிகள் எடப்பாடி மீது குற்றம் சாட்டி அவரது உருவ பொம்மையை எரிக்க தொடங்கினர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் அதிமுக எடப்பாடி அணியினரும் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து மேடையில் அவருக்கு எதிராக பேச ஆரம்பித்தனர். இரு கட்சியினிடைய பனிப்போர் போல் இருந்து வந்தாலும் அதிமுக பாஜக உடனான கூட்டணி வைக்க சம்மதம் தான் தெரிவித்து வருகிறது. ஆனால் அண்ணாமலை அதற்கு தயாராக இல்லை என்பது போல தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.

பாஜக அண்ணாமலை தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் நான் கட்சியை விட்டு ராஜினாமா செய்து பாஜகவிற்காக ஒரு தொண்டனாக பணியாற்றுவேன் என தெரிவித்ததாகவும் கூறியுள்ளனர்.மேலும் இது குறித்து டெல்லியில் மூத்த நிர்வாகிகளுடன் அண்ணாமலை பேச இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவல் உண்மை என்பதை உணர்த்தும் வகையில் அண்ணாமலை இம்மாதம் 26 ஆம் தேதி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறுகின்றனர். தற்பொழுது அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்க ரெடி என்று கூறினாலும் பாஜக நிர்வாகிகள் பலர்  எடப்பாடி பக்கம் இணைந்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், அண்ணாமலைக்கு  கூட்டணி வைக்க மனமில்லை என அரசியல் சுற்றுவட்டாரங்களின் கூறுகின்றனர்.