ADMK : அதிமுக பாஜக மீண்டும் இணைந்த நிலையில் கட்சிக்குள் பணி போரானது ஆரம்பித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இருப்போம் ஆனால் கூட்டணி ஆட்சி நடக்காது என்பதை தெரிவித்தது தான். இப்படி அவர்கள் கூறியதால் புதிய தமிழக கட்சியானது அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது அதிமுக பாஜக மீண்டும் கூட்டணி வைத்தது குறித்து செய்தியாளர்கள் கூட்டணி ஆட்சி அமைக்குமா? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி அரசு இன்று எதுவும் அமித்ஷா கூறவில்லை. கூட்டணி மூலம் ஆளும் கட்சியை இருந்திருப்போம் ஆனால் கூட்டணி ஆட்சி கிடையாது. டெல்லிக்கு பிரதமர் மோடியின் தமிழ்நாட்டிற்கு என் பெயரை தான் கூறினார் என்று தெரிவித்தார். இதனையடுத்து கொள்கை பரப்பு செயலாளர் தம்பி துரையும் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது சரியான ஒன்று. கூட்டணி முறையில் தேர்தலை எதிர்கொள்ளலாம் ஆனால் கூட்டணி ஆட்சி கிடையாது.
மேலும் வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் NDA கூட்டணி வெற்றி பெற்றாலும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளார். இதனை முழுமையாக எதிர்த்து புதிய தமிழகம் கூட்டணியை முறித்துக் கொண்டது. இது ரீதியாக அக்கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கூறுகையில், யாரோ ஒருவரை முதல்வராக்க நாங்கள் ஏன் பாடுபட வேண்டும். கூட்டணி ஆட்சியை தான் எதிர்பார்க்கிறோம். கூட்டணி பங்கு என்பது கட்டாயம் வேண்டும். இப்படி இருக்கும் சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் கூட அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக கூறுவது ஏற்புடையதல்ல. அதனால், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர்.