சற்றுமுன்: மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!! இந்த தேர்தலில் இவர்களுக்கு கூடுதல் 10 மதிப்பெண்!!
நாடாளுமன்ற வாக்குப்பதிவானது அனைத்து இடங்களிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் நடந்து முடிந்தது. தற்பொழுது உத்திரபிரதேசத்தில் ஏழு கட்டங்களாக இந்த வாக்கு பதிவானது நடைபெற உள்ள நிலையில் அனைத்து மக்களும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று ஓர் தனியார் பள்ளியானது மிகவும் புதுமையான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
அதில் ஒவ்வொரு மாணவரின் பெற்றோரும் இந்த தேர்தலில் வாக்களித்தால் அவர்களின் பிள்ளைகளுக்கு அடுத்து வரப்போகும் தேர்வில் 10 மதிப்பெண்கள் கூடுதலாக போடப்படும் என்று தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலானது 20ஆம் தேதி நடக்கும் பட்சத்தில் அடுத்த நாளே எங்கள் பள்ளியில் பெற்றோர் கூட்டம் நடத்தப்படும். அதில் பெற்றோர்கள் கலந்து கொண்டு தாங்கள் வாக்களித்ததை காட்டினால் அவர்களின் பிள்ளைகளுக்கு அடுத்த தேர்வில் கூடுதலாக மதிப்பெண் போடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி அங்கு பயிலும் மாணவர்களிடம் தேசியக்கொடி கொடுத்து அதனை ஏந்தி சாலைகளில் மக்களை வாக்களிக்க கோரி ஊர்வலம் நடத்தியும் வருகின்றனர். மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்களும் தங்களது வாக்கை இந்த தேர்தலில் செலுத்தினால் மேற்கொண்டு ஒருநாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம் என்ற சலுகையும் விடுத்துள்ளனர். இந்த தனியார் பள்ளியின் இந்த முயற்சியை உ.பி-யில் பலரும் பாராட்டி வருகின்றனர்.