சற்றுமுன்: முதலமைச்சர் காலை உணவு திட்டத்தில் இட்லி தோசை!! மாணவர்களுக்கு வரப்போகும் அடுத்த குட் நியூஸ்!!
திமுக ஆட்சிக்கு வந்ததும் பல நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளதை அடுத்து அதில் ஒன்றுதான் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம். இந்த திட்டமானது ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வருகிறது. தற்பொழுது இது தமிழகத்தில் உள்ள 1545 அரசு பள்ளிகளிலும் செயல்முறையில் உள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கு காலையில் உப்புமா கிச்சடி என டிபனாக வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் காலை உணவை தலைமை ஆசிரியர் அல்லது பள்ளி ஆசிரியர் ஒருவர் சாப்பிட்டு உணவின் தரம் அறிந்த பிறகு தான் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அவ்வப்போது நிர்வாகிகளும் திடீரென்று பள்ளிக்கு விசிட் அடித்து பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறித்த கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள் மற்றும் காலை உணவு, மதிய உணவு குறித்து மாவட்ட கலெக்டர் மாணவர்களிடையே கேட்டறிந்தார்.
அவ்வாறு கேட்டறிந்த கலெக்டரிடம் மாணவர்கள் அவர்களின் தலையாய கோரிக்கையாக, காலை உணவு திட்டத்தில் இட்லி, தோசை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறியுள்ளனர். மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற மாவட்ட ஆட்சியர் கட்டாயம் முதல்வரிடம் உங்களது கோரிக்கையை கூறி நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக மாணவர்களுக்கு உறுதியளித்துள்ளார்.
தற்பொழுது வரையும் மதிய உணவு திட்டம் மட்டுமே நடைமுறையில் இருந்த பொழுது பல இடங்களில் மாணவர்களின் குடும்ப சூழல் மற்றும் இன்னல்களை பொறுத்து காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு வழங்கப்படும் உணவானது தரமாக இருக்க வேண்டும் என முதல்வரின் ஆணைக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்கப்பட்ட வருகிறது. அந்த வரிசையில் மாணவர்களின் விருப்பத்தையும் முதல்வர் நிறைவேற்றி தரும் பொழுது அவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வருவர் என பலரும் கூறுகின்றனர்.