சற்றுமுன்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000!! வெளிவந்த புதிய அறிவிப்பு!!
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது திமுக தேர்தல் அறிக்கையில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரேஷன் அட்டை உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ 1000 வழங்குவோம் என தெரிவித்தனர்.ஆனால் இரண்டு வருடங்கள் ஆகியும் இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை.தற்பொழுது தான் வருகின்ற அண்ணா பிறந்தநாள் அன்று இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறியுள்ளனர்.
இவ்வாறு கூறிவிட்டு ஒவ்வொரு மாதமும் அந்த தொகையை பெறுவதற்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்துவதையே வழக்கமாக வைத்துள்ளனர். குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ஆயிரம் வழங்கப்படும் என்று கூறிவிட்டு தற்பொழுது வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டும்தான் இந்த பணம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதனால் மக்கள் மத்தியில் திமுக மீதான அபிப்பிராயமானது குறைய தொடங்கியுள்ளது. அந்த வகையில் தற்பொழுது குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் பணம் எவ்வாறு செலுத்தப்படும் என்றும் பல கேள்விகள் எழுந்து நிலையில், இந்த பணம் ஆனது கூட்டுறவு வங்கிகள் மூலம் தகுந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கு தொடங்கப்படும் என கூறியுள்ளனர்.அதன் மூலம் மாதம் தோறும் பணம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களின் கைகளில் வழங்கப்பட்டபணத்தால் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், இவ்வாறு வங்கி கணக்கு மூலம் செலுத்தும் பட்சத்தில் அதனை தவிர்க்க முடியும் என தெரிவித்துள்ளனர். மேற்கொண்டு வங்கி கணக்கில் செலுத்தப்படும் பணத்தை அவர்கள் மைக்ரோ ஏடிஎம் மூலம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளனர்.
அதேபோல ஓய்வூதியம் வாங்குபவர்கள் அரசு ஊழியர்கள் மேற்கொண்டு டாக்ஸ் கட்டுபவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தனியாக தரவுகள் ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் கூறினர்.