சற்றுமுன்: இனி கட்டணமில்லா பேருந்து பயணத்திற்கு இந்த ஸ்மார்ட் கார்டு கட்டாயம்!! மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற பொழுது திமுகவானது பல அறிக்கைகளை வெளியிட்டது. அதில் கட்டணமில்லா பேருந்து பயணமும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் வழங்கும் திட்டமும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வகையில் தமிழ்நாட்டைப் போலவே இதர மாநிலங்களும் இந்த கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டத்தை அடுத்தடுத்து அமல்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் ஆனது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் 2000, கட்டணமில்லா பேருந்து பயணம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 3 ஆயிரம் வழங்கப்படும் என்று பல திட்டங்களை தங்களது அறிக்கையில் கூறியிருந்தது.
அதேபோலவே காங்கிரஸ் ஆனது 135 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. அவ்வாறு ஆட்சி அமைத்ததில் தாங்கள் கூறிய திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டத்தை தொடக்கி வைத்துள்ளது.
இதனை கர்நாடக முதல்வர் சித்தராமையா தொடக்கி வைத்து மேற்கொண்டு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.அதில் அவர் கூறியதாவது, பாஜக ஆட்சி அமைத்த போது தான் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என எண்ணியிருந்தனர். ஆனால் காங்கிரஸ் அவ்வாறு ஒருபோதும் நினைப்பதில்லை. இனிவரும் நாட்களில் பெண்கள் தங்களது உரிமங்களில் ஏதாவது ஒன்று அதாவது, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை இவ்வாறு ஏதாவது ஒன்றை காட்டி பயணம் செய்து கொள்ளலாம்.
கூடிய விரைவில் இதற்கான ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். அதன் பிறகு பெண்கள் அனைத்து இடங்களிலும் இந்த ஸ்மார்ட் கார்டு காட்டி சொகுசு பேருந்துகளை தவிர இதர பேருந்துகளில் பயணித்துக் கொள்ளலாம் என கூறினார். இந்தத் திட்டத்தின் மூலம் 40 லட்சத்திற்கும் மேலான பெண்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.