MDMK Vaiko: மதிமுக பொது செயலாளரான வைகோ விற்கு 80 வயதாகிறது. அவ்வபோது உடல்நல பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு வருவது வழக்கம். தற்போது சட்டமன்ற தேர்தல் வருவதையொட்டி திமுகவிடம் அதிக தொகுதிகளை கேட்டும் வருகிறார். இவர் சமூகநீதிக்கு எதிரான பல போராட்டங்களுக்கு குரல் கொடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. தற்சமயம் சென்னையில் உள்ள வைகோ, திடீரென்று எதிர்பாராத விதமாக கால் தடுக்கி அவரது வீட்டில் கீழே விழுந்துள்ளார்.
இதனால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு இவர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். வைகோவிற்கு அடிபட்டதை அடுத்து அவரது தொண்டர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். அதுமட்டுமின்றி விரைவில் அவர் குணமடைந்து வரவேண்டுமென்றும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இவருக்கு எம்மாதிரியான சிகிச்சை கொடுக்கப்படுகிறது? என்ன காயம்?? என்பது குறித்து தற்போது வரை அப்போலோ மருத்துவமனை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இது ரீதியாக ஒரு சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மருத்துவமனை சார்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கொண்டு மருத்துவமனையில் அவர்கள் தொண்டர்கள் சூழ்ந்துள்ளதால் பரப்பரப்பாக காணப்படுகிறது.