இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!..

Photo of author

By Parthipan K

இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!..

Parthipan K

இந்த விளக்கை மட்டும் ஏற்றினால் போதும் கணவன் மனைவி ஒன்று சேரலாம்!..

கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழவில்லையா வாழவில்லையா? இருவருக்கும் அடிக்கடி சண்டை சச்சரவு இருக்க?குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனை வருகிதா?இப்படி பல கஷ்டம் இருக்கா.. அப்போ இதை செய்து பாருங்க. உங்க ஊரில் உள்ள
அரசமரம் இருக்கக்கூடிய ஒரு கோவிலை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.எந்த கோவிலில் அரசமரம் இருந்தாலும் நல்லதுதான். அரச மரத்திற்கு அடியில் விநாயகர் சிலை இருந்தாலும் இன்னும் சிறந்தது.அந்த மரத்தின் அடியில் இரண்டு மண் அகல் தீபங்களை ஏற்ற வேண்டும். தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு மரத்தை மூன்று முறை சுற்றிவர வேண்டும்.

காலை இந்த தீபத்தை ஏற்ற தகுந்த நேரம் இல்லை மாலை நேரத்தில் ஏற்றுகிறேன் என்றாலும் சரி.அந்த சமயத்தில் இந்த தீபத்தை ஏற்றி இரண்டு நிமிடம் கண்களை மூடி தெய்வத்திடம் மனதார வேண்டிக்கொள்ளுங்கள். கணவன் மனைவியான எங்கள் இருவருக்குள் எந்த ஒரு பிரச்சனையும் கருத்து வேறுபாடு வர கூடாது. இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு சந்தோஷமாக இறுதிவரை வாழ வேண்டும்.இந்த விளக்கை கணவன் ஏற்றி வைத்து வேண்டுதல் வைத்தாலும் பலிக்கும். மனைவி ஏற்றி வைத்து வேண்டுதல் வைத்தாலும் பலிக்கும். கணவன் மனைவி இரண்டு பேரும் சேர்ந்து இந்த தீபத்தை ஏற்றி வைப்பது இன்னும் சிறப்பு.

இரண்டு அரச இலை நமக்கு தேவைப்படும். ஒவ்வொரு அரச இலைக்கு மேலே ஒவ்வொரு மண் அகல் தீபங்களை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு பூஜை அறையிலேயே தீபம் ஏற்றி வைத்துவிட்டு மனதார இறைவனிடம் வேண்டுதல் வைத்தாலும் கணவன் மனைவி ஒற்றுமையாக இருக்கலாம். வீட்டில் ஏற்றக்கூடிய மண் அகல் தீபத்தை சனிக்கிழமை அன்று காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணிக்குள் ஏற்றலாம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையாக இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.