உங்கள் வீட்டில் இனி கரண்ட் கட்டாகமலிருக்க ஜஸ்ட் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க போதும்!

Photo of author

By Divya

உங்கள் வீட்டில் இனி கரண்ட் கட்டாகமலிருக்க ஜஸ்ட் இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க போதும்!

தமிழக மக்கள் பொதுவாக சந்தித்து வரும் பிரச்சனைகளில் ஒன்று மின்வெட்டு.ஒரு நாளைக்கு 5 முதல் 6 மணி நேரம் மின்வெட்டு சந்தித்த காலம் எல்லாம் உள்ளது.ஆனால் தற்பொழுது மின்தடை ஏற்படுவது சற்று குறைந்திருக்கிறது.

மழை நேரத்தில்,இடி மின்னல் ஏற்படும் நேரத்தில் மட்டும் மின்வெட்டு பிரச்சனையை சந்தித்து வருகின்றோம்.அதிலும் கோடை காலத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் சொல்ல வேண்டியதில்லை.எதனால் மின்வெட்டு ஏற்படுகிறது என்ற காரணம் தெரியாமல் மின் ஊழியர்களை வசைபாடி வருகின்றோம்.

உங்கள் வீட்டில் மின்வெட்டு ஏற்பட்டால் அவை தனிப்பட்டதா? இல்லை பொதுவானதா? என்று முதலில் செக் செய்ய வேண்டும்.உங்கள் சுற்றத்தில் மின்சாரம் இல்லை என்றால் 02 274 40 66 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.இதனால் மின்சார ஊழியர்கள் விரைந்து வந்து மின்வெட்டை சரி செய்வார்கள்.

ஒருவேளை தங்கள் வீட்டிற்கு மட்டும் மின்வெட்டு ஏற்ப்பட்டால் அவர்கள் உடனடியாக வந்து சரி செய்ய மாட்டார்கள்.இதனால் மின் ஊழியர்கள் அலட்சியமாக செயல்படுகிறார்கள் என்று அர்த்தம் இல்லை.ஒரு வீட்டில் மட்டும் கரண்ட் கட் ஆனால் அவை இன்டிவிஜுவல் ப்யூஸ் ஆப் கால் என்று அழைக்கப்படுகிறது.இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டால் கிராமப்புறங்களில் மாலை 6 மணி மற்றும் நகர்ப்புறங்களில் இரவு 7 மணிக்கு பிறகு அதை சரி செய்யக் கூடாது என்பது அரசின் விதியாகும்.

ஒரே ஒரு வீட்டில் மின்வெட்டு ஏற்பட்டால் மாலை 6 மணிக்கு மேல் அதை சரி செய்ய அந்த பகுதியில் உள்ள லைனை ஆப் செய்ய முடியாது.இதனால் சாலை லைட் அணைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்படும்.இதனால் தான் இரவு நேரத்தில் மின்வெட்டு ஏற்பட்டால் மின்சார ஊழியர்களால் அதை சரி செய்ய வருவதில்லை.

அதேபோல் மழைக்காலங்களில் மின்வெட்டு ஏற்பட்டால் மின் ஊழியர்கள் அதை விரைவில் சரி செய்ய மாட்டார்கள்.அதற்கான காரணம் மின்கம்பங்கள் மழையில் நனைந்து ஈரமாக இருக்கும்.
மெயின் ஆஃப் செய்தாலும் கம்பத்தில் ஈரம் இருப்பதினால் எர்த் வரும்.இதனால் மின்வெட்டை சரி செய்யும் நேரத்தில் ஊழியர்களை மின்சாரம் தாக்க நேரிடும்.இதனால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பிருக்கிறது.இந்த காரணத்தினால் தான் மழை காலங்களில் மின் ஊழியர்களால் உடனடியாக மின்தடையை சரி செய்ய முடிவதில்லை.எனவே இனி மின்வெட்டு ஏற்பட்டால் மின்சார ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் அவர்களின் நிலையும் புரிந்து கொள்ள முயலுங்கள்.