உங்கள் ஸ்மார்ட் போன் ஸ்பீடை அதிகரிக்க இதை மட்டும் க்ளியர் பண்ணுங்க!! 

Photo of author

By Divya

உங்கள் ஸ்மார்ட் போன் ஸ்பீடை அதிகரிக்க இதை மட்டும் க்ளியர் பண்ணுங்க!!

நவீன உலகில் ஒவ்வொரு வீடுகளிலும் குறைந்தது ஒரு ஆண்ட்ராய்டு போனாவது பயன்படுத்தப்படுகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.சந்தையில் ரூ.8000த்தில் இருந்து ஆண்ட்ராய்டு மொபைல்கள் விற்பனைக்கு இருக்கின்றது.ஆண்ட்ராய்டு போன்கள் புதிதாக வாங்கப்பட்டபோது இருந்து வேகம் மாதங்கள்,வருடங்கள் நகர நகர அதன் குறைந்துவிடுகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.இவ்வாறு ஆண்ட்ராய்டு போனில் வேகம் குறையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

படித்தவர்கள்,படிக்காதவர்கள் என்று அனைவரும் எளிதில் பயன்படுத்தக் கூடிய வகையில் ஆண்ட்ராய்டு போன்கள் உள்ளதால் அதற்கான வரவேற்பு மக்களிடத்தில் அதிகமாகவே இருக்கின்றது.

உங்கள் மொபைல் போனில் வேகம் குறைந்தால் நீங்கள் ஸ்மார்ட் போனை மறுதொடக்கம் செய்யலாம்.உங்கள் மொபைலில் இருக்கின்ற தேவையற்ற கோப்புகளை டெலிட் செய்வதன் மூலம் அதன் வேகத்தை அதிகரிக்க முடியும்.உங்கள் மொபைலில் இருக்கின்ற செயலிகள் அல்லது கோப்புகள் இடத்தை எடுத்துக் கொள்கின்றன என்பதை அறிந்து அதனை நீக்கிவிடுவது நல்லது.

NSA-படி மறுதொடக்கம் செய்வது உங்கள் மொபைலின் பாதுகாப்பை அதிகரிக்க செய்கிறது.உங்கள் மொபைலின் முகப்பு பக்கத்தில் பல விட்ஜெட்டுகள் நிரம்பியிருந்தால் புதுப்பித்துக் கொள்ள அவற்றை அகற்ற வேண்டும்.எனவே உங்கள் ஆண்ட்ராய்டு போனிற்கு தரமான விட்ஜெட்டுகள் தேர்ந்தெடுப்பது நல்லது.இதன் மூலம் போனின் செயல்திறனை அதிகரிக்க முடியும்.