கண் கண்ணாடி அணிந்து மார்க் வந்ததை எளிமையாக நீக்க இதை மட்டும் வீட்டில் செய்யுங்கள்!!

Photo of author

By Rupa

உடலில் கண்கள் மிகவும் முக்கியமான உறுப்பாகும்.ஆயுள் முழுவதும் கூர்மையான கண் பார்வை இருக்க வேண்டியது அவசியம்.ஆனால் இன்று பலரும் கண் பார்வை குறைபாட்டால் அவதியடைந்து வருகின்றனர்.நம் தாத்தா பாட்டி காலத்தில் 70 வயதிலும் கூர்மையான கண் பார்வை கொண்டிருந்தனர்.ஆனால் தற்பொழுது சிறு குழந்தைகள் கூட கண் பார்வை குறைபாட்டால் கண்ணாடி அணிந்து வலம் வருகின்றனர்.

ஆரோக்கியமற்ற உணவுமுறை பழக்கம்,கண் பராமரிப்பு இன்மை போன்ற காரணங்களால் பார்வை குறைபாடு ஏற்படுகிறது.இதனால் நீண்ட காலமாக கண்ணாடி அணியும் பழக்கம் இருப்பவர்களுக்கு கண்கள் மற்றும் மூக்கு பகுதியில் கரு வளையங்கள் மற்றும் கரும் புள்ளிகள் தோன்றி முக அழகை கெடுத்துவிடும்.இந்த கரும் புள்ளிகள் மறைய இந்த வீட்டு வைத்தியங்களில் ஏதேனும் ஒன்றை பின்பற்றவும்.

வீட்டு வைத்தியம் 01:

*சர்க்கரை

இரண்டு ஸ்பூன் சர்க்கரையில் சிறிது ரோஸ் வாட்டர் மிக்ஸ் செய்து கரும்புள்ளிகள் மீது ஸ்க்ரப் செய்தால் அவை எளிதில் நீங்கிவிடும்.

வீட்டு வைத்தியம் 02:

*தக்காளி
*சர்க்கரை

ஒரு சிறிய தக்காளியை பேஸ்டாக்கி சிறிது சர்க்கரை கலந்து மூக்கின் மீதுள்ள கருமையான புள்ளிகள் மீது அப்ளை செய்து வந்தால் அவை சில தினங்களில் மறைந்துவிடும்.

வீட்டு வைத்தியம் 03:

*உருளைக்கிழங்கு

ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு எடுத்து தோல் நீக்கிவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும்.இந்த சாற்றை மூக்கின் மேல் உள்ள கருமையான புள்ளிகள் மீது அப்ளை செய்யவும்.சிறிது நேரத்திற்கு பிறகு குளிர்ந்த நீர் பயன்படுத்தி மூக்கை சுத்தம் செய்யவும்.இப்படி தினமும் செய்து வந்தால் கரும் புள்ளிகள் எளிதில் நீங்கிவிடும்.