குடலில் உள்ள கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேற இதை மட்டும் செய்யுங்கள்!!

Photo of author

By Sakthi

குடலில் உள்ள கழிவுகள் அடித்துக் கொண்டு வெளியேற இதை மட்டும் செய்யுங்கள்!!

 

நம் குடலில் உள்ள நச்சுக்களை கழிவுகளை எவ்வாறு எளிமையாக நீக்குவது என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

 

நம் உடலில் அதிக சிக்கல்களை ஏற்படுத்தக் கூடிய உறுப்பு மலக்குடல் தான். ஏன் என்றால் நாம் சரியான முறையில் மலம் கழிக்காவிட்டால் நமக்கு இதன் மூலமும் நம் உடலுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும். நம் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகளை சரியான முறையில் நீக்க இந்த குடல் கழிவு நீக்க சிகிச்சை உதவும். இந்த குடல் கழிவு நீக்க சிகிச்சையை செய்ய ஒரே ஒரு பொருள் மட்டும் போதும். அந்த ஒரு பொருள் நமக்கு அடிக்கடி கிடைக்கக்கூடிய நிலவாரை தான்.

 

இந்த நிலவாரை செடியின் இலைகளில் இருந்து கிடைக்ககூடிய பொடியை நிலவாரை சூரணம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த நிலவாரை செடியின் அனைத்து பாகங்களும் மருந்தாக பயன்படுகின்றது.

 

இந்த மருந்தை தயார் செய்யும் முறை…

 

* நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் நிலவாரை சூரணம் அல்லது நிலவாரை பொடி வாங்கிக் கொள்ளவும்.

 

* இந்த நிலவாரை பொடியில் ஒரு ஸ்பூன் அளவு அதாவது 5 கிராம் அளவு எடுத்து வெந்நீரில் அதாவது சூடான நீரில் கலந்து கொள்ளவும்.

 

* இதை இரவு சாப்பிட்ட பிறகு தூங்கச் செல்லும் முன்பு இதை குடிக்க வேண்டும். அடுத்த 8 மணி நேரத்தில் இந்த நிலவாரை பொடி மருந்து வேலை செய்யும்.

 

* காலை நேரத்தில் இருந்து 5 முதல் 6 வரை மலம் வெளியேறும். பிறகு மதியத்திற்கு மேல் தானாக சரியாகிவிடும். அவ்வாறு சரியாகவில்லை என்றால் ஒரு ஸ்பூன் பொட்டுக் கடலையும், உப்பு போட்டு எலுமிச்சம் பழச் சாறையும் குடிக்க வேண்டும்.

 

மலக்குடல் தேக்கம் அதாவது மலக்குடலில் கழிவுகள் தேங்கி இருப்பவர்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறை இந்த நிலவாரைப் பொடியை இவ்வாறு பயன்படுத்த வேண்டும்.

 

மலச்சிக்கல் பிரச்சனை தொடர்ச்சியாக இருக்கின்றது என்பவர்கள் தினமும் இந்த நிலவாரைப் பொடியை அரை ஸ்பூன் முதல் முக்கால் ஸ்பூன் அளவு எடுத்துக் கொண்டு இதை தினமும் இரவு வெந்நீரில் கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடித்தால் மறுநாள் காலையில் இரண்டு முறை மலம் வெளியேறும்.

 

யாரெல்லாம் இதை எடுத்துக் கொள்ளக்கூடாது…

 

* அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் மலக்குடலில் புண் உள்ளவர்கள் இந்த நிலவாரை பொடியை எடுக்க கூடாது.

 

* வயிறு வலி, வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த பொடியை பயன்படுத்தக் கூடாது.

 

* குடல் அடைப்பு நோய் உள்ளவர்கள் இந்த பொடியை பயன்படுத்தக் கூடாது.

 

* 60 வயதிற்கு மேல் உள்ளவர்களும் இந்த நிலவாரை பொடியை பயன்படுத்த கூடாது.

 

இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் பொழுது பகலில் தூங்கக் கூடாது. மாமிச உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொறித்த உணவுகளை திவிர்க்க வேண்டும். மதியம் 2 மணி வரை நீராகாரங்கள் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.