வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிலைத்து இருக்க இதை செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

0
39
#image_title

வீட்டில் எப்பொழுதும் செல்வம் நிலைத்து இருக்க இதை செய்யுங்கள் போதும்!! 100% தீர்வு கிடைக்கும்!!

நம் அனைவருக்கும் பணம் மற்றும் நகைகள் முக்கியமான ஒன்றாகி விட்டது.அவசர காலத்தில் நமக்கு யாரும் உதவ முன் வர மாட்டார்கள்.நாம் சேர்த்து வைத்த நகை,பணம் தான் கைகொடுக்கும்.அப்படி இருக்கையில் இவை எப்பொழுதும் வீட்டில் நிலைத்து இருக்க சில வழிகளை மட்டும் கடைபிடித்தால் போதும்.நம் வீட்டில் செல்வம் பெருகி நிலைத்து இருப்பதை யாராலும் தடுக்க முடியாது.

செல்வம் பெருகி நிலைத்து நிற்க பரிகாரம்:-

இந்த பரிகாரம் செய்ய முதலில் இரண்டு கண்ணாடி கிண்ணங்கள் எடுத்து கொள்ளவும்.அதில் ஒரு கிண்ணத்தில் வெள்ளை எள்,மற்றொரு கிண்ணத்தில் கருப்பு எள் சேர்த்து கோபுரம் போல் வைத்து கொள்ளவும்.

பிறகு பூஜைக்கு பயன்படுத்தும் ஏதேனும் ஒரு பூ வகையை எடுத்து அந்த இரண்டு கிண்ணங்களிலும் 1 என்ற எண்ணிக்கையில் வைக்கவும்.

பிறகு வில்வ இலை எடுத்து அந்த இரண்டு கிண்ணங்களிலும் வைக்கவும்.அதன் பின்னர் உலகின் முதற் கடவுள் என்று அழைக்கப்படும் விநாயகர் முன் ஒரு அருகம்புல்லை வைத்து மனதார வேண்டிக்கொள்ளவும்.

பின்னர் அவரவர் குலதெய்வத்தை மனதில் நினைத்து வழிபட வேண்டும்.பின்னர் வெள்ளை எள் கிண்ணம் மற்றும் கருப்பு எள் கிண்ணத்தை இரண்டு கைகளிலும் வைத்து

“ஓம் தன வசிய சிவாய வசிய ஸ்வாஹா, ஓம் ஜன வசிய சிவாய வசிய ஸ்வாஹா, ஓம் தான்ய வசிய சிவாய வசிய ஸ்வாஹா” என்ற சக்தி வாய்ந்த மந்திரத்தை உச்சரிக்கவும்.

இந்த பரிகாரத்தை அவரவர் இல்லத்தில் தான் மேற்கொள்ள வேண்டும்.இது 48 நாட்கள் மேற்கொள்ள வேண்டிய பரிகாரம் ஆகும்.இதை எந்த நாட்களில் வேண்டுமானாலும் செய்யத் தொடங்கலாம்.பரிகாரம் செய்யத் தொடங்கி 30 நாள் முடிந்த பின் கிண்ணத்தில் இருக்கும் வெள்ளை எள் மற்றும் கருப்பு எள்ளை ஓடுகின்ற நீரில் விட்டு விட வேண்டும்.பிறகு மீண்டும் புது எள்ளை பரிகாரத்திற்கு பயன்படுத்தவும்.செல்வம் நிலைத்து இருக்க நாம் செய்யும் பரிகாரம் 48 நாட்கள் முடிந்தவுடன் செய்ய கூடாது என்று இல்லை.விருப்பம் இருப்பவர்கள் தொடர்ந்து பரிகாரத்தை செய்யலாம்.இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் வீட்டில் செல்வம் எப்பொழுதும் நிலைத்து இருக்கும்.