இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

Photo of author

By Parthipan K

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

Parthipan K

Updated on:

இந்த விரதத்தை கடைபிடித்தால் போதும் நீங்கள் மனக்கவலை இல்லாமல் வாழலாம்!!

 

திருவோண நோன்பு என்பது சீனிவாசனான பெருமாளுக்கு உகந்த நாளாகும் .மாதந்தோறும் திருவோண நட்சத்திரத்தில் மேற்கொள்ளப்படும் விரதம் திருவோண விரதம்.இந்த நட்சத்திர நன்னாளில் பெருமாளை வழிபாடு செய்தால் வாழ்வில் நன்மை உண்டாகும்.ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் பெருமாளுக்குரிய திருவோணமும் சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற சிறப்பு அடைமொழியுடன் கூடியது.

தசாவதாரங்களில் வாமன அவதாரம் எடுத்த பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்ட நிகழ்வு திருவோண நட்சத்திரத்தன்று தான் நிகழ்ந்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அதாவது திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரம் நிகழ்ந்தது. இந்த திருவோண நட்சத்திரத்தில் தான். அதனால் தான் ஒவ்வொரு ஆவணி மாதத்தில் வரும் திருவோண நடத்திரத்தில் கேரளாவில் ஓணம் பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

மாலையில் சந்திர தரிசனம் காண வேண்டும். இதனால் சந்திர தோஷம் இருந்தால் விலகிவிடும். ஒருமுறை திருவோண விரதம் இருந்தால்கூட போதும் சந்திரனின் அருள் பெற்று அவரால் உண்டாகும் தோஷங்கள் விலகி இனிமையான வாழ்வு கிட்டும்.திருவோண விரதம் மேற்கொள்பவர்களின் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும். மனக்குறைகள் அகன்று சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

அதுமட்டுமின்றி குழந்தை இல்லாதவர்கள் இந்த விரதத்தை மேற்கொண்டால் வாமனன் போன்ற அழகான அறிவான குழந்தை கிடைக்கும் மற்றும் செல்வம் நிலைத்து நிற்கும் என்பது நம்பிக்கையாகும். மாதந்தோறும் திருவோண நாளில் விரதம் இருந்தால் சீர் குலைந்த மனம் சீராகும். உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட பகை அகலும்.

துன்பங்கள் அனைத்தும் நீங்கி நன்மைகள் உண்டாகும். திருவோண விரதம் இருக்கும் பக்தர்கள் பெருமாளை வணங்கி துதிப்பாடல்கள் பாட வேண்டும். விரதம் இருக்க முடியாதவர்கள் அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.மேலும் வீட்டில் நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பான பலன்களை தரும்.திருவோணம் நட்சத்திரமான இன்றைய தினம் பெருமாளை காலையில் வழிபாடு செய்தால் நோய்கள் குணமாகும். நண்பகல் வழிபாடு செய்தால் செல்வம் பெருகும். மாலை வழிபாடு செய்தால் பாவம் நீங்கும்.