நம் சருமத்தில் கரும்புள்ளிகள்,பருக்கள் போன்றவை ஏற்பட எண்ணெய் பசை முடக்கிய காரணமாகிறது.சருமத்தில் இயற்கையான எண்ணெய் பசை இருக்க வேண்டியது அவசியமான ஒன்று தான்.இருப்பினும் எண்ணெய் பசை அதிகமாகிவிட்டால் முகத்தில் பருக்கள் முட்டிக் கொண்டு வெளிவரும்.
சருமத்தில் அளவிற்கு அதிகமாக எண்ணெய் பசை கொண்டிருப்பவர்கள் முகத்தை அடிக்கடி குளிர்ந்த நீரில் சுத்தம் செய்ய வேண்டும்.எண்ணெய் பசையை கட்டுப்படுத்த தவறினால் மூக்கின் மீது வெண் பருக்கள் அதிகளவு உருவாகிவிடும்.அதிக எண்ணெய் பசை இருந்தால் கன்னத்தில் குழிவிழத் தொடங்கிவிடும்.
எண்ணெய் பசையை அதிகப்படுத்தும் அழகு சாதனப் பொருட்களை தவிர்க்க வேண்டும்.எண்ணெய்,கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகளவு உட்கொள்ளக் கூடாது.முகத்தில் அதிகளவு எண்ணெய் பசை தேங்கி இருந்தால் இறந்த செல்களை வெளியேற்றுவது கடினமாகிவிடும்.இதனால் சருமம் புத்துணர்வின்றி சோர்வாக தெரியத் தொடங்கும்.
முகத்தில் வழியும் எண்ணெய் பசையை கட்டுப்படுத்தும் முறை:
1)சருமத்தில் உள்ள எண்ணெய் பசையை கட்டுப்படுத்த ஐஸ்கட்டியை முகத்தில் வைத்து தேய்க்கலாம்.இதனால் எண்ணெய் பசை முழுவதும் கட்டுப்படும்.அதேபோல் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி வந்தால் எண்ணெய் வழிவது கட்டுப்படும்.
2)தேயிலை மர எண்ணெய்,மஞ்சள் தூள்,தேன் போன்றவற்றை சம அளவு எடுத்து மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் எண்ணெய் பிசுக்கு நீங்கிவிடும்.
3)குளிர்ந்த நீரில் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் பதத்திற்கு குழைத்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் எண்ணெய் பசை கட்டுப்படும்.
4)சந்தனம்,முல்தானி மெட்டியில் பன்னீர் வாட்டர் சேர்த்து நன்கு குழைத்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் எண்ணெய் பசை கட்டுப்படும்.