ADMK: அதிமுக இரட்டை இலை ஒதுக்குவது சம்பந்தமாக எடப்பாடிக்கு எதிராக போடப்பட்ட வழக்கில் ஓபிஎஸ்க்கு சாதகமாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதாவது உட்கட்சி விவகாரம் மற்றும் இரட்டை இலை ஒதுக்குவது , உட்கட்சி ரீதியாக தேர்தல் ஆணையம் தலையிடலாம் என தெரிவித்தது. எடப்பாடி பழனிச்சாமி இதனை எதிர்த்து மேல்முறையீடு வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் நீதிபதிகள், கட்சியின் சின்னம் குறித்து இரு தரப்பிடமும் முறையாக விசாரணை செய்த பிறகு அடுத்த கட்ட நகர்வு இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது. மேற்கொண்டு தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டின் பெயரில் மட்டுமே விசாரணை நடக்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறியிருந்தனர். இதற்கு முன்னதாக சூரியமூர்த்தி என்பவர் உட்கட்சி விவகாரம் நடக்கும் வரை இரட்டை இலையை ஒதுக்க கூடாது என்று வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கில் இந்த உத்தரவை சேர்க்கும்படி அதிமுக சார்பாக மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று அந்த வழக்கானது அமர்வுக்கு வந்தது. அதில் நீதிபதிகள் முன்னிலையில் அதிமுக, தற்போது வரை தேர்தல் சின்னம் ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் விசாரணை செய்து வருவதாக கூறியுள்ளனர். இப்படி விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் சூரியமூர்த்தி தொடுத்த வழக்கில் இந்த உத்தரவை சேர்க்க முடியாது எனக்கு ஒரு இந்த மனுவானது செல்லாது என்று உத்தரவிட்டுள்ளனர்.