Operation Sindoor: 1999 கார்கில் போரின் போது இந்தியா அந்த தாக்குதலுக்கு வைத்த பெயர் விஜய், இரண்டாவதாக பங்களாதேஷ் பிரிக்கப்பட்ட போது ஆப்ரேஷன் சக்தி என்று பெயர் சூட்டப்பட்டது. 54 வருடங்கள் கழித்து பாகிஸ்தான் தீவிரவாத தாக்குதலுக்கு எதிரான ஆபரேஷனுக்கு சிந்தூர் என பெயர் வைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இந்திய துணைக் கண்டத்தில் அதிகளவு கிடைக்க கூடிய குங்குமம் என்று அர்த்தம். குறிப்பாக ஜம்மு காஷ்மீரில் இது அதிகளவு விளையக்கூடிய பொருள்.
தற்போது அங்கு ஏற்பட்ட தாக்குதலால் அங்கிருக்கும் ஆண்களை தான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்கினர். இதனால் அந்த பெண்களின் குங்குமம் பறிக்கப்பட்டுள்ளது. இதனையெல்லாம் மையமாக வைத்து தான் ஆபரேஷன் சிந்தூர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லை பகுதிகள் குறிப்பாக 9 இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் 250 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் பஹவல்பூர் என்ற பகுதியில் ஏவுகணை மூலம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒன்பது இடங்களிலும் பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட முகாம்கள் இருந்துள்ளது. இந்த தாக்குதல் மூலம் தற்போது வரை கிட்டத்தட்ட 100 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் விமான போக்குவரத்து சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதேபோல பாகிஸ்தான் எல்லையிலும் வான்வழி போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மேற்கொண்டு இந்திய எல்லைகளில் ஜாமர் பொருத்தப்பட்டுள்ளதால் எதிரி நாட்டினரிடமிருந்து வரும் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். இதனையெல்லாம் முன்கூட்டியே அறிந்து தான் பாதுகாப்பு ஒத்திகை குறித்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.