உங்கள் வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக இருந்தால் அதை ஒழித்துக் கட்ட இங்கு சொல்லப்பட்டுள்ள டிப்ஸை பாலோ பண்ணுங்க.
டிப்ஸ் 01:
ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறை ஸ்ப்ரே பாட்டிலில் பிழிந்து தண்ணீர் ஊற்றி மிக்ஸ் செய்ய வேண்டும்.இதை எறும்பு நடமாட்டம் உள்ள பகுதியில் ஸ்ப்ரே செய்தால் அவற்றை கட்டுப்படுத்தலாம்.
டிப்ஸ் 02:
புதினா இலையை அரைத்து சிறிது தண்ணீர் கலந்து எறும்பு நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்யலாம்.
டிப்ஸ் 03:
ஒரு கப் தண்ணீரில் ஒரு மூடி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து வீட்டில் ஸ்ப்ரே செய்தால் எறும்புகள் நடமாட்டம் கட்டுப்படும்.
டிப்ஸ் 04:
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிறிதளவு இலவங்கப்பட்டை மற்றும் கிராம்பு பொடி சேர்த்து வீட்டில் ஸ்ப்ரே செய்தால் அதன் தொல்லை ஒழியும்.
டிப்ஸ் 05:
ஒரு பாட்டிலில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி சிறிதளவு மிளகு கீரை எண்ணெய் கலந்து ஸ்ப்ரே செய்தால் எறும்புகள் நடமாட்டம் குறையும்.
டிப்ஸ் 06:
வேப்பம் பூவை ஒரு கப் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறவைத்து வடித்து வீடு முழுவதும் ஸ்ப்ரே செய்தால் எறும்புகள் நடமாட்டம் குறையும்.
டிப்ஸ் 07:
ஆரஞ்சு பழத் தோலை அரைத்து எறும்புகள் நுழையும் இடத்தில் பூசினால் அவற்றின் நடமாட்டம் குறையும்.அதேபோல் கடையில் விற்கும் எறும்பு சாக் அல்லது எறும்பு பொடியை பயன்படுத்தியும் எறும்புகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தலாம்.