எலுமிச்சை ஒன்று போதும் உங்கள் முகத்திலுள்ள ஓபன் போர்ஸ்லாம் அப்படியே மறைந்துவிடும்!!

Photo of author

By Divya

எலுமிச்சை ஒன்று போதும் உங்கள் முகத்திலுள்ள ஓபன் போர்ஸ்லாம் அப்படியே மறைந்துவிடும்!!

அனைவருக்கும் சருமத்தை மிருதுவாக வைத்துக் கொள்ள வேண்டுமென்ற ஆசை இருக்கின்றது.ஆனால் சருமத்தில் ஓபன் போர்ஸ்,கரும்புள்ளிகள்,கொப்பளங்கள் இருந்தால் அதன் அழகு குறைந்துவிடும்.குறிப்பாக ஓபன் போர்ஸ் நமது முகத்தை டல்லாக கட்டக் கூடியவையாக இருப்பதினால் அதை ஆரம்ப நிலையில் குணமாக்கி கொள்வது அவசியமான ஒன்றாக திகழ்கின்றது.

சருமத்தில் காணப்படும் ஓபன் போர்ஸ் குணமாக இந்த வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம்.

வீட்டு வைத்தியம் 01:

1)முட்டையின் வெள்ளை கரு
2)எலுமிச்சை சாறு

ஒரு முட்டையின் வெள்ளை கருவை கிண்ணத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை அதில் பிழிந்து நன்கு கலக்கவும்.இதை முகத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் கழித்து வாஷ் செய்து வந்தால் ஓபன் போர்ஸ் நீங்கி மிருதுவான சருமம் கிடைக்கும்.

வீட்டு வைத்தியம் 02:

1)முல்தானி மெட்டி
2)ரோஸ் வாட்டர்

இரண்டு தேக்கரண்டி முல்தானி மெட்டி மற்றும் இரண்டு தேக்கரண்டி ரோஸ் வாட்டரை மிக்ஸ் செய்து முகத்தில் அப்ளை செய்து சில நிமிடங்களுக்கு பின்னர் தண்ணீர் கொண்டு கழுவி சுத்தப்படுத்தினால் ஓபன் போர்ஸ் நீங்கும்.

வீட்டு வைத்தியம் 03:

1)எலுமிச்சை சாறு
2)தென்

ஒரு கிண்ணத்தில் பாதி எலுமிச்சை பழ சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கி முகத்திற்கு அப்ளை செய்தால் ஓபன் போர்ஸ் நீங்கும்.

வீட்டு வைத்தியம் 04:

1)பழுத்த பப்பாளி துண்டுகள்
2)தேன்

ஒரு கீற்று பழுத்த பப்பாளி பழத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.பிறகு இதை மசித்து ஒரு பாத்திரத்தில் சேர்க்கவும்.அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி தேனை மசித்த பப்பாளி பழத்தில் சேர்த்து மிக்ஸ் செய்து முகத்திற்கு அப்ளை செய்தால் ஓபன் போர்ஸ் நீங்கும்.