இந்த 4 வரியை ஒரு முறை உச்சரித்தால் போதும்! ஜாதகத்தில் உள்ள எப்பேர்பட்ட தோஷமாக இருந்தாலும் தாக்கம் குறைந்து விடும்!

Photo of author

By Kowsalya

ஜாதகத்தில் சனி தோஷம், இராகு கேது தோஷம் என்று பல பேர் பல பிரச்னைகளில் அனைவரும் மாட்டி கொண்டு முழித்து கொண்டிருக்கிறார்கள். சனி பிடிக்க போகிறது, ராகு பெயர்ச்சி ஆகிறார் என்றாலே உள்ளுக்குள் பயம் ஏற்பட்டு விடும். ஆனால் இனி பயப்பட தேவை இல்லை.

சனிபகவான் மிகவும் நேர்மையானவர். முடிந்த வரை பொய் பேசாமல் மற்றவர்களுக்கு கெடுதல் நினைக்காமல் இருந்து விட்டால் போதும் பாதி பிரச்சினைகள் குறைந்து விடும்.

இதோடு இறைவனையும் வழிபட வேண்டும். இராகு கேது பிரச்சினையாக இருந்தாலும் சரி, சனி பகவானால் பிரச்சனை இருந்தாலும் சரி, அவர்களிடமிருந்து தப்பிப் பிழைக்க, அனுமனின் பாதங்களைச் சென்று சரணடைவது தான் ஒரே வழி.

அனுமன் வழிபாட்டைத் தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு கர்ம வினைகள் நீங்கி, துன்பங்கள் அனைத்தும் நிச்சயமாக குறையும் என்பதில் சந்தேகமில்லை.

வாழ்வில் எந்த குறைகள் எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் சரி அனுமனின் மூல மந்திரத்தை 5 முறை உச்சரித்து வந்தால் போதும்.

 

அந்த மந்திரம்:

“அஞ்ஜனா கர்ப்ப ஸம்பூதம் குமாரம் ப்ரும்ஹ சாரிணம் துஷ்ட க்ரஹ வினாசயா ஹனுமந்த முபாஸ் மஹே”!

 

தீராத துன்பங்கள் விரைவில் தீரவேண்டும் எனில் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில்  ஒரு தீபத்தை ஏற்றி வைத்து, ஸ்ரீராம ஜெயம் என்ற மந்திரத்தை உச்சரித்து அதன் பின்பு, இந்த நான்கு வரி மந்திரத்தை சொல்லி, அனுமரை மனமுருகி வேண்டிக்கொள்ளுங்கள். எவ்வளவு முறை வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை சொல்லலாம்.