உப்பு மட்டும் இருந்தால் போதும்!கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!  

0
200

உப்பு மட்டும் இருந்தால் போதும்!கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!

மகாலட்சுமி என்று அழைக்கப்படும் பொருட்களில் மிக முக்கியமான ஒன்று உப்பு. உப்பின் மூலம் எண்ணற்ற பரிகாரங்கள் செய்யலாம் அதன் மூலம் நாம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் நீங்கும். வீட்டில் அனைத்து மூளைகளிலும் தண்ணீர் படாமல் இருக்கும் இடங்களில் உப்பை வைக்க வேண்டும்.

மேலும் குளியல் அறையில் தண்ணீர் படாமல் இருக்கும் இடத்தில் உப்பை வைக்க வேண்டும். அவ்வாறு வைத்த உப்பு கரைந்து கொண்டே வரும். கரையும் போது நம்முடைய கஷ்டங்கள் கரைந்து போகும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை. அந்த குளியல் அறையில் வைத்துள்ள உப்பினை வாரத்தில் ஒரு முறை ஒரு கைப்பிடி அளவு எடுத்து தண்ணீரில் சேர்த்து குளித்து வரவேண்டும். அப்போது எதிர்மறை எண்ணங்கள் ஏற்படாது.

மேலும் தினந்தோறும் பயன்படுத்தும் மணி பர்ஸ் ,பேக் போன்றவைகளில் சிறிதளவு உப்பு வைத்துக் கொண்டால் பண வரவு அதிகரிக்கும். மேலும் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அவர்கள் உறங்கும் அறையில் ஒரு சிறிய பாத்திரத்தில் உப்பு வைத்துக் கொள்ளலாம். அப்போது அந்த கருத்து வேறுபாடு ஆனது குறைய தொடங்கும். மேலும் வாகனங்கள் கழுவும் பொழுது தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கழுவுவதன் மூலம் வாகனத்தால் ஏற்படும் நஷ்டங்கள் குறையும். இவ்வாறு நீங்கள் உப்பை வைத்து இந்த சில பரிகாரங்களை செய்வதன் மூலம் மூன்று நாட்களில் அனைத்தும் மாறத் தொடங்குவதை பார்க்கலாம்.

Previous articleதீபாவளியன்று உங்கள் முகமும் ஜொலிக்க வேண்டுமா?பாசிப் பயிறு பேஸ் பேக்!   
Next article“போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அதற்கும் எங்களிடம்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை!