இந்த 1 காயை மட்டும் இப்படி பயன்படுத்துங்கள் வாழ்நாள் முழுவதும் மங்கு பிரச்சனையே வராது!!

Photo of author

By Divya

இந்த 1 காயை மட்டும் இப்படி பயன்படுத்துங்கள் வாழ்நாள் முழுவதும் மங்கு பிரச்சனையே வராது!!

முகத்தில் கன்னங்களில் மங்கு அதாவது கருப்பு நிற படைகள் உருவாகின்றன.இவை ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகளவில் ஏற்படுகிறது.மங்கு விழுந்தால் அவை வயதான தோற்றத்தை ஏற்படுத்திவிடும்.எனவே மங்கு ஏற்பட்டால் ஆரம்ப நிலையில் அதை குணமாக்கி கொள்ள வேண்டும்.

மங்கு(கருப்பு நிற படைகள்) வருவதற்கான காரணங்கள்:

*சீரற்ற மாதவிடாய்
*ஹார்மோன் பிரச்சனை
*முக பராமரிப்பின்மை

தேவைப்படும் பொருட்கள்:-

1)உருளைக்கிழங்கு
2)எலுமிச்சை சாறு
3)ஜாதிக்காய்

செய்முறை:-

ஒரு ஜாதிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி விடவும்.பின்னர் ஒரு உருளைக்கிழங்கை தோல் நீக்கி விட்டு காய்கறி சீவல் பயன்படுத்தி சீவவும்.

அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதனுள் சீவி வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு அரைத்து பேஸ்ட்டாகவும்.இதை ஜாதிக்காய் பொடியில் கலந்து விடவும்.

அதன் பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி பாதி எலுமிச்சையின் சாற்றை அதில் பிழிந்து விடவும்.

இந்த பேஸ்டை முகத்தில் மங்கு காணப்படும் இடங்களில் அப்ளை செய்து ஒரு மணி நேரம் கழித்து வாஷ் செய்து வந்தால் அவை சில நாட்களில் மறைந்து விடும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)வில்வக்காய்
2)பசும்பால்

செய்முறை:-

நாட்டு மருந்து கடையில் கிடைக்க கூடிய வில்வக்காயை வாங்கி அரைத்து பொடியாக்கி ஒரு கிளாஸ் அளவு பசும்பாலில் கொதிக்க விட்டு அருந்தி வந்தால் முகத்தில் இருக்கின்ற மங்கு மறையும்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)நித்யமல்லி
2)வெண்ணெய்

நான்கு அல்லது ஐந்து நித்தியமல்லி பூவை அரைத்து அதனுடன் வெண்ணெய் கலந்து சாப்பிட்டு வந்தால் எளிதில் மங்கு மறைந்து விடும்.அடிக்கடி முகத்தை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.தினமும் கண்ணாடி பார்த்து முகத்தில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிந்து உரியத் தீர்வு காண வேண்டும்.