குஜராத்தில் ராகுலுக்கு நீதியா?? வாய்பில்லை ராஜா !! வெளுத்து வாங்கிய சீமான்!!
ராகுல் காந்திக்கு குஜராத் நீதிமன்றத்தில் எப்படி நீதி கிடைக்கும்?? என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் கட்சி சீமான் புதுக்கோட்டையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு வந்தபோது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர்
தமிழகத்தில் இருக்கும் ஏராளமான சாதிய பிரச்சனைகளை ப.ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜும் தங்கள் படங்களில் பதிவு செய்கிறார்கள். நல்ல செய்தி. தவறில்லை. இங்கு அரை நூற்றாண்டுக்கு மேல் பெரியார் மண் என ஏராளமானோர் சொல்லி வந்தனர்.
களத்தில் நிறைய வேலைகள் இருப்பதால் நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும். அது தவறில்லை . அதேபோல பட்டியலினத்தை சேர்ந்தவரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பேரவைத் தலைவராக்கினார். அதேபோல திருச்சி பொதுத்தொகுதியில் தலித் எழில்மலையை நிற்கவைத்து வெற்றிப் பெற செய்துள்ளார்.
அதேபோல திமுக கட்சியும் ராசாவை நீலகிரி தொகுதிக்கு அனுப்ப வேண்டிய அவசியம் ஏன்?? பெரம்பலூர் தொகுதியில் நிற்கவைத்து வெற்றி பெறச்செய்யலாமே ?? அடுத்து மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வேண்டாம். அதற்கு பதில் இலவச குடிநீர் கொடுங்க போதும். ஏனெனில் ஒரு குடம் குடிநீர் தற்போது ரூ.15 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுக்கே ஒவ்வொரு குடும்பமும் அதிகமாக தொகை செலவிட வேண்டியுள்ளது.
ராகுல் காந்தி மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். நீங்கள் எப்படி தகுதி நீக்கம் செய்யலாம். மக்களால் தோற்கடிக்க பட்டவர்கள் எல்லாம் மாநிலங்களவை எப்படி உறுப்பினராக்குகிறீர்கள்?? குஜராத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு நீதி கிடைக்கும் என்றால் எப்படி நீதி கிடைக்கும்??.
மலை, மண்வளம், நீர்வளம் எல்லாமே அடுத்த தலைமுறைக்கு சேர்த்து தான் இயற்கை கொடையாக கொடுத்து உள்ளது. இதை நாமே முழுவதும் கொள்ளையடித்தால் அடுத்த தலைமுறையினர் எங்கு செல்வார்கள். நாம் தமிழர் கட்சியானது மக்களுக்கு ஏற்ற வகையில் ஜனநாயகமாக முடிவுகளை எடுத்து அதை சர்வாதிகாரமாக செயல்படுத்துவதுதான் அதன் நோக்கம்.
ஒரு கப்பலுக்கு ஒரு மாலுமி தான், ஒரு பேருந்துக்கு ஒரு ஓட்டுனர் தான் எப்போதும் இருக்க முடியும். ஒரே பேருந்தை ஓட்ட தெரியும் என்பதற்காக எல்லாரும் ஓட்ட முடியாது. இதே போல தான் நாம் தமிழர் கட்சியும் எப்போதும் நடைபெறும் என அவர் கூறினார்.