நிறைவு பெற்றது திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலின் ஜேஷ்டாபிஷேக விழா!

0
178

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வருடம் தோறும் ஜேஷ்டாபிஷேகம் மூன்று நாள் நடைபெறும் அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் நேற்று கடைசி நாளாகும் நேற்று தினம் அதிகாலை கோவிலில் சுப்ரபாத சேவை நடைபெற்றது. காலை 10 மணி அளவில் இருந்து மதியம் 12 மணி வரையில் கோவில் விமான பிரகாரத்தில் உற்சவர்கள் ஊர்வலம் நடைபெற்றது.

அதன்பின்னர் சத கலச ஹோமம், மகா சாந்தி ஹோமம், உள்ளிட்டவை மதியம் 12 மணி அளவிலிருந்து மதியம் ஒரு மணி வரையில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி ,கோவிந்தராஜ சுவாமி திருக்கல்யாண மண்டபத்துக்கு கொண்டு வந்து மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு தங்க கவச பிரதிஷ்டை, அக்‌ஷத ரோஹனம், பிரம்மகோஷம்,ஆஸ்தானம், கவச சமர்ப்பணம் மாலை 5 மணியிலிருந்து 6 மணி வரையில் ஸ்ரீ தேவி ,பூதேவி கோவிந்தராஜ சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து அருள்பாலித்தார்கள்.

ஜேஷ்டாபிஷேக நிகழ்ச்சிகளில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள் கோவில் சிறப்பு நிலை துணை அதிகாரி ராஜேந்திரரடு மற்றும் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

Previous articleஇரு வழக்குகள்- பல்க்காக மாட்டப்போகும் அதிமுகவின் முக்கிய தலைகள்!! ஸ்டாலின் போட்ட ஆர்டர்!!
Next articleமுன்னாள் அமைச்சர் வீட்டில் சிக்கியது முக்கிய ஆவணங்கள்!! லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!!