சூர்யாவின் கங்குவா படம் பிளாப்.. இது தான் முக்கிய காரணம்!! தவெக தலைவரை சீண்டிய ஜோதிகா!! 

Photo of author

By Rupa

Kanguva: தவெக தலைவர் விஜய்யை தாக்கும் வகையில் சூர்யா நடித்த கங்குவா படம் குறித்து ஜோதிகா தனது விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் கங்குவா திரைப்படமானது இரண்டரை ஆண்டுகள் கழித்து வந்தாலும் எதிர்மறை விமர்சனங்களை தான் தற்போது வரை பெற்று வருகிறது. படம் முழுவதும் என்ன ஒரு காரணம் என அறியாமல் கத்திக்கொண்டே உள்ளனர் என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது. இவ்வாறு இருக்கையில் சூர்யாவின் ரசிகர்கள் இதனை ஏற்காமல் தக்க பதிலடி கொடுத்து தான் வருகின்றனர்.

மேலும் ஜோதிகா இணையத்தில், காங்குவா படம் குறித்து பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், விஜய்யின் கோட் படம் குறித்து குறிப்பிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இணையத்தில் விஜய் ரசிகர்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது, நான் சூர்யாவின் மனைவியாக சொல்லவில்லை சினிமா ரசிகையாக இந்த பதிவை போட்டுள்ளேன். அதாவது கங்குவான் போன்ற படமானது சினிமா துறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் ஓர் நகர்வு தான். அதனை சிந்தித்து செயல்படுத்திய சூர்யா குறித்து பெருமையாக உள்ளது.

குறிப்பாக முதல் அரை மணி நேரம் கட்டாயம் பயனில்லை, மிகவும் இரைச்சலான ஒலி மட்டுமே காணப்படுகிறது. திரைப்படங்கள் உருவாக்கும் பொழுது குறைகள் என்பது கட்டாயம் இருக்கும். ஆனால் தமிழ் சினிமாவில் இப்படியொரு ஒளிப்பதிவு என்பது கிடையாது. அதேபோல ஒரு சில பெரிய பட்ஜெட் படங்களில் பழைய கதையும், பெண்களின் பின் சுற்றுவதும் மேலும் பெண்கள் குறித்து இரட்டை அர்த்த வசனங்கள் ஆக்ஷன் காட்சிகள் போன்றவை சற்றும் கூட அறிவு தன்மையற்று இருக்கும்.

அதையெல்லாம் யாரும் விமர்சனம் செய்வதில்லை. அதை விட்டுவிட்டு கங்குவா படத்தில் உள்ள எதிர்மறையை மற்றும் பேசி வருகின்றனர். அதில் இருக்கும் பெண்கள் சண்டை போடும் காட்சி என தொடங்கி சிறுவனுக்கு இருக்கும் அன்பு துரோகம் குறித்து யாரும் பேசவில்லை. இந்த எதிர்மறை கருத்துக்கள் குறித்து பட குழுவினர் வருத்தப்பட வேண்டாம். அவ்வாறு பேசுபர்வகளால் எந்த ஒரு முன்னேற்றமும் சினிமாவில் இருக்காது என தெரிவித்துள்ளார்.

இவர் பெரிய பட்ஜெட் இரட்டை வார்த்தை அர்த்தம் என கூறியது சமீபத்தில் விஜய்- யின் ரிலீசான கோட் படம் என கூறுகின்றனர். அதில் ரெட்டை அர்த்தம் கொண்டு காட்சியை குறித்து தான் ஜோதிகா குறிப்பிட்டு கூறியுள்ளதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர். இவ்வாறு ஜோதிகாவின் பதிவுக்கு விஜய் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.