கதாநாயகிகளுக்கான ஒரு புதிய தன்னம்பிக்கையும், ஊக்கத்தையும் சினிமாவில் ஏற்படுத்திய நாயகி தான் நம் ஜோதிகா. இன்று அவர் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஜோதிகா 1978ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இவர் தந்தை சந்தர் சாதனா பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர், தாய் சீமா சாதனா மஹாராஷ்ட்ரா மாநிலத்தை சிறந்தவர். ஜோதிகா மும்பையில் உள்ள செம்பூர் இஸ்லாமிய பள்ளியில் பயின்றார்.

ஜோதிகா முதன் முதலில் இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் பாலிவுட்டில் டோலி சஜா கே ரகஹனா என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார். அதன் பிறகு இயக்குனர் SJ சூர்யா இயக்கத்தில் வெளியான வாலி திரைப்படத்தில் கோலிவூட்க்கு வந்தார். வாலி திரைப்படத்திற்காக சிறந்த புதுமுக நாயகிக்கான பிலிம் பேர் விருது மற்றும் தினகரன் விருது பெற்றார்.அதன் பிறகு இயக்குனர் வசந்த் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் பூவெல்லாம் கேட்டு பார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

ஜோதிகாவின் சினிமா வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது SJ சூர்யா இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடித்த குஷி திரைப்படம் ஆகும்.
அதன் பிறகு டும் டும் டும், முகவரி, ரிதம், ஸ்நேகிதியே திரைப்படம் ஆகும். இதில் ஸ்நேகிதியே அவர் முதல் இயக்குனரான ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடித்த திரில்லர் திரைப்படம் ஆகும்.
ஜோதிகா-நக்மா-ரோஷினி:

ஜோதிகாவுக்கு நக்மா என்னும் அக்காவும் ரோஷினி என்ற தங்கையும் உள்ளனர். நக்மா 90ஸ் காலகட்டத்தின் மிகப்பெரிய கதாநாயகி ஆவார். இவரது தங்கை ரோஷின் ஓரிரு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
எனினும் ரோஷினி மட்டுமே ஜோதிகாவின் உடன் பிறந்தவர் ஆவார். ஜோதிகாவின் தாய் சீமா முதலில் அரவிந்த் மொரார்ஜி என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய மகள் தான் நக்மா. பின்பு செம அவரை விவாகரத்து செய்து விட்டு சந்தர் சாதனாவை மணந்தார். இவர்களுடைய மகள்கள் தான் ஜோதிகா மற்றும் ரோஷினி.
நிழல் காதல் நிஜமானது:

1999 ஆம் ஆண்டு பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்தனர். அதன் பிறகு மொத்தம் 7 திரைப்படங்களில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர். 2005ஆம் ஆண்டு ஜோதிகா மற்றும் சூர்யா நடிக காக்க காக்க திரைப்படம் வெற்றிநடை போட்டது அதே நேரத்தில் இவர்கள் இருவரது காதல் வதந்திகளும் பரவ தொடங்கின. முதலில் ஜோதிகாவை சூர்யா திருமணம் செய்ய அவருடைய தந்தை மற்றும் தென்னக சினிமாவின் முக்கிய புள்ளியான சிவகுமார் சம்மதம் தெரிவிக்கவில்லை.
சந்திரமுகி-மொழி-பச்சைக்கிளி முத்துச்சரம்:

முதலில் சந்திரமுகி திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாகவே நடிக்க ஜோதிகா அணுகப்பட்டார். கதாநாயகிகளில் பலர் சூப்பர்ஸ்டார் உடன் நடிக்க தவம் கிடக்க ஜோதிகாவோ துர்கா கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் உணர்ந்து அதில் நடிக்கவே விருப்பம் தெரிவித்துள்ளார். பின் சில பல காரணங்களால் ஜோதிகாவிடமே அந்த வந்தது, ஜோதிகாவும் அதில் நடித்து பட்டை கிளப்பி விட்டார்.
அதன் பிறகு சரத்குமாருடன் பச்சை கிளி முத்துச்சரத்தில் நெகடிவ் கதாபாத்திரத்திலும், பிரித்விராஜ் உடன் மொழி திரைப்படத்தில் வாய் பேச முடியாத, காது கேளாத கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார்.
கோலிவுட் டு கோயம்பத்தூர் மருமகள்:

ஜோதிகாவின் திரைப்பயணம் வெற்றிபெற்றது போலவே அவரது காதலும் நடிகர் சூர்யாவுடன் வெற்றிக் கண்டது. செப்டெம்பர் 11ஆம் தேதி 2006ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைப்பெற்றது. அதன் பிறகு ஜோதிகா திரைப்படத்தில் நடிக்கவில்லை. சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிகளுக்கு தியா, தேவ் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர்.

பொதுவாக திரை உலகை சேர்ந்த இருவர் காதலித்தால், அது திருமணத்தில் முடிவது என்பது அரிதான விஷயம். திருமணம் செய்தாலும் விவாகரத்து வாங்காமல் வாழும் ஜோடிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருக்கும்.
இதில் சூர்யா மற்றும் ஜோதிகா எல்லோருக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக வாழ்ந்து வருகின்றனர். வாடா மாநிலத்தை சேர்ந்த ஜோதிகா தென் தமிழக குடும்ப பாரம்பரியத்தை சேர்ந்த சூர்யாவை திருமணம் செய்து தன்னை அந்த குடும்பத்திற்கு ஏற்றார் போல் மாற்றி இருக்கிறார். முதலில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சிவகுமார் சில வருடங்களுக்கு பிறகு வீட்டில் பார்த்து இருந்தால் கூட இப்படி ஒரு மருமகள் எங்களுக்கு கிடைத்திருக்க மாட்டார் எனக் கூறும் அளவுக்கு ஜோதிகா மாறி இருக்கிறார்.
கதாநாயகிகளின் நாயகியான ஜோதிகா:

கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு ஜோதிகா 36 வயதினிலே திரைப்படம் மூலம் கம் பேக் கொடுத்தார். திருமணத்திற்கு பிறகு சில கதாநாயகிகள் அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில், சின்னத்திரையில், சிலர் படம் பார்க்கும் மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஆனால் ஜோதிகா நாட்களை விட முதிர்ச்சியான நடிப்பு, நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரம், கண்ணியமான உடை என இன்னும் மக்கள் மனதில் உயர்ந்து கொண்டே தான் போகிறார்.
சினிமாவில் ஜெயிக்க துடிக்கும் அத்தனை கதாநாயகிகளுக்கும் பொன்மகள் ஜோதிகா ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.