வருகிற பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு காதல் என்பது பொதுவுடமை என்ற திரைப்படமானது வெளிவர இருக்கிறது. ஜெய் பீம் திரைப்படத்தில் செங்கேனியாக நடித்த நடிகை லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாக்கி வெளிவர இருக்கும் இத்திரைப்படம் குறித்து பலரும் பலவித கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த திரைப்படத்தின் பிரமோஷனின் பொழுது காதல் என்பது பொதுவுடமை படம் குறித்தும் ஜெய் பீம் படம் குறித்தும் சில சுவாரசியமான தகவல்களை இவர் பகிர்ந்துள்ளார். காதல் என்பது பொதுவுடைமை திரைப்படமானது இரண்டு பெண்களுக்கிடையே இருக்கக்கூடிய அன்பு பரிமாற்றத்தை வெளிப்படுத்தக்கூடிய படமாக இருப்பதால் செங்கேணியாக நடித்த பெண் எப்படி இது போன்ற ஒரு திரைப்படத்தில் நடிக்க முடியும் என்ற கேள்விக்கு திரை உலகின் உள்ளே வந்துவிட்டால் அனைத்தும் கேரக்டர்களாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்பதே பதிலாக இருக்கிறது.
ஜோதிகா குறித்து நடிகை லிஜோமோல் ஜோஸ் தெரிவித்திருப்பதாவது :-
ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்துவிட்டு சூர்யாவின் மனைவி ஆன நடிகை ஜோதிகா அவர்கள் லிஜோமோல் ஜோஸ் அவர்களிடம் இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவை விட நீங்கள் மிகவும் நன்றாக நடித்திருக்கிறீர்கள் என தெரிவித்திருக்கிறார். இவ்வாறு நடிகை ஜோதிகா அவர்கள் தெரிவித்திருந்தது ஒரு புறம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மற்றொரு புறம் ம் தனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததாக ஜோஸ் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு காரணம் நடிகர் சூர்யா பல ஆண்டுகளாக சினிமா துறையில் உச்ச நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறவர் அவருடன் இணைத்து தன்னை அவரை விட நன்றாக நடித்துள்ளீர்கள் என குறிப்பிட்டு கூறியது கஷ்டத்தை உண்டாக்கியதாக நடிகை ஜோஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.