“ஊசி இடம் கொடுக்காமல், நூல் நுழையாது” – சர்ச்சையில் சிக்கிய பாக்யராஜ் !!!

Photo of author

By Parthipan K

“ஊசி இடம் கொடுக்காமல், நூல் நுழையாது” – சர்ச்சையில் சிக்கிய பாக்யராஜ் !!!

Parthipan K

பொள்ளாச்சியில் ஏராளமான பெண்களிடம் பேஸ்புக் மூலம் நட்பாக பழகி, பாலியல் வன்கொடுமை செய்து, ஆபாச வீடியோ எடுத்து கும்பல் ஒன்று மிரட்டி நகை, பணம் பறித்து வந்தது.

இதுகுறித்து இளம்பெண் ஒருவர் அளித்த புகாரை அடுத்து, விவரம் வெளியுலகிற்கு தெரியவந்தது. இதுதொடர்பாக திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் நடிகரும் இயக்குனருமான கே.பாக்யராஜ் ஒரு திரைப்பட விழாவில் பேசும்போது ” பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் பெண்களிடமும் தவறு இருக்கிறது, ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது” என பேசியிருந்தார்.

இதுதொடர்பான வழக்கில் நேற்று மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பாக்கியநாதன் முன்  தன்பேச்சு குறித்து விளக்கம் அளித்தார். பின்    நிருபர்களை சந்தித்த அவர் “என் கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது, தவறாக புரிந்து கொண்டோருக்கு என் வருத்தத்தை தெரிவித்து கொள்வதாக ஆணையத்தில் கூறினேன். என் பதிலை மகளிர் ஆணையம் ஏற்றுக்கொண்டது” என் கூறினார்.