பாலிவுட் நடிகரின் மகளுடன் காதலில் கே எல் ராகுல்?… அடுத்த ஆண்டு திருமணம்

Photo of author

By Vinoth

பாலிவுட் நடிகரின் மகளுடன் காதலில் கே எல் ராகுல்?… அடுத்த ஆண்டு திருமணம்

Vinoth

Updated on:

பாலிவுட் நடிகரின் மகளுடன் காதலில் கே எல் ராகுல்?… அடுத்த ஆண்டு திருமணம்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திர வீரரான கே எல் ராகுல் தற்போது காயம் காரணமாக ஓய்வில் இருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாக சீராக ரன்களை சேர்த்து இந்திய அணியில் தனககான இடத்தை தக்கவைத்துள்ளார் கே எல் ராகுல். இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறியுள்ள அவர் ஜெர்மனியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில் அவரின் திருமணம் பற்றிய தகவல்கள் இப்போது வைரலாகி வருகின்றன. கே எல் ராகுல் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டியை சில ஆண்டுகளாக காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் எழுந்தன.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, கே.எல்.ராகுலும் அதியா ஷெட்டியும் அடுத்த 3 மாதங்களில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று செய்திகள் வந்தன. ஆனால் அவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் திருமணம் செய்துகொள்ள வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அதியா ஷெட்டியின் முதல் படமான தடப்பின் பிரீமியரில் இருவரும் கலந்துகொண்டு அவர்களது உறவை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதியா இப்போது ராகுலுடன் பல சர்வதேச கிரிக்கெட் சுற்றுப்பயணங்களில் பயணிக்கிறார். சமீபத்தில், ராகுல் சிகிச்சைக்காக ஜெர்மனி சென்ற போத் அதியாவும் கூட சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.