காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11,565 வீடுகள் சேதமடைந்துள்ளது. அதிலும் 1662 வீடுகளில் மட்டும் மக்கள் தங்கமுடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது என, அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். பாதிக்க பட்டஎங்களுக்கு உதவி கிடைக்குமா என்று, அப்பகுதி மக்கள் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர்.

அதற்கு, அதிகாரிகளும் உங்களுக்கான நிதி உதவியை நாங்கள் பெற்று தருகிறோம் என்று, நம்பிக்கைவைத்துள்ளனர்.
காஞ்சிபுரம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், மற்றும் உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் மட்டும் 1250-க்கும் மேற்பட்ட குக்கிராமங்ககள் இருக்கின்றது.
அந்த கிராமங்களுக்கு 1985 ல் இருந்து 2011 ஆண்டு வரை மட்டுமே, வீடு வழங்குதல் திட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்ட அனைத்து அரசு வீடுகளும், இப்பகுதியில் உள்ளன.
அப்படி பயன் பெற்ற பெரும்பாலான மக்களின் வீடுகளில், சுவர், கூரை என பலவும் சேதாரம் அடைந்துள்ளது.
அதிலும், மழைக்கலாம் என்றால் தெருவில் மடுமல்லாது எங்கள் வீடுகளிலும் மழைநீர் நிரம்பிவிடுகிறது, என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர்.
சேதாரம் அடைந்த வீடுகளுக்கு பதிலாக, புதிய வீடுகள் வேண்டும், எனவும், சேதமடைந்த வீட்டை சரிசெய்ய நிதி உதவி கேட்டும், அப்பகுதி வட்டார ஆட்சியரிடம் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மனு அளித்துள்ளனர்.
எனவே சேதாரம் அடைந்த வீடுகளை கணக்கெடுப்பு செய்ய, ஊரக வளர்ச்சித்துறை இந்த பணியை தொடங்கியுள்ளது.
கணக்கெடுப்பிற்கு பின்னரே சேதமடைந்த வீடுகள் எவ்வளவு என்பது தெரியவந்தது. 5,172 லேசான சேதாரத்திலும், 6,393 வீடுகள் அதிகளவு பாதிப்பிலும், 1374 வீடுகள் மட்டும் தான் நல்ல நிலையில் உள்ளது, மொத்தம் 11,565 வீடுகள் சேதாரம் அடைந்துள்ளது.
அதிலும் 1662 வீடுகள் உபயோகம் அற்றவை என கணக்கெடுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைப்பற்றி ஊரக வளர்ச்சித் துறை அதிகாரியிடம் பேசியதற்கு, விரைவில் நிதிஉதவி அளிக்கப்படும் என கூறினார்.