கண்கலங்க வைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு !க/பெ ரணசிங்கம் திரை விமர்சனம்!

Photo of author

By Kowsalya

பிழைப்புக்காக வெளிநாட்டில் தங்கி வேலை செய்யும் குடும்பத்தாரின் நிலைமையை எடுத்துச் சொல்கிறது இந்தக் கதை.

ராமநாதபுரத்தை சேர்ந்த ரணசிங்கத்திற்கு அரியாநாச்சியுடன் திருமணம் நடைபெறுகிறது. பிழைப்பிற்காக வளைகுடா செல்கிறார் ரணசிங்கம். அங்கு விபத்தில் இறந்துவிடுகிறார். அவர் உடலை வெளிநாட்டில் இருந்து மீட்டு ரத்தமும் சதையுமாக போராடும் கதையே இந்த படத்தின் கதை.

வேலைக்காக வெளிநாடு சென்று அங்கு இறந்துவிட்டால் அவரை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்காக இடையே உள்ள சட்ட சிக்கல்களை அப்பட்டமாக சொல்லுகிறது இந்த படம். விஜய் சேதுபதிக்கு குறைவான காட்சிகளே மக்கள் செல்வன் என்பதை நிரூபித்துவிட்டார். காதல் காட்சிகளாகட்டும், வசனம் பேசுவதில் ஆகட்டும், மக்களுக்காகப் போராடும் காட்சிகளில் இவர்தான் மண்ணின் மைந்தர் என்பதை மறுபடியும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் ஒற்றை கதாபாத்திரம் திரைப்படத்தை தாங்கிப் பிடிப்பது அவர்தான். கிராமத்து பெண்ணாக மாறி நாடி நரம்புகளும் நடிப்பு ஊறிப்போய் அளவு அழகாக நடித்திருக்கிறார். அரியநாச்சி என்ற கேரக்டருடன் ஒன்றி வாழ்ந்துள்ளார் என்றே கூறலாம். கணவனின் உடலை மீட்க போராடும் மனைவியின் வாழ்க்கையை கண்களில் கண்ணீர் வரவழைக்கும் நடிப்பை நேர்த்தியாக நடித்துள்ளார்.

ஜிப்ரான் பின்னணி இசையும் பாடல்களும் கதையோடு நம்மை இழுத்துச் செல்கிறது. ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு ராமநாதபுரத்தின் பொட்டல்காட்டையும் போராட்டத்தையும் இயல்பாகக் காட்டுகிறது.

ஆக மொத்தத்தில் படம் சமூக அக்கறையை எடுத்துச் சொல்லி கண்களில் கண்ணீர் பெருக வைக்கிறது.